டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு இப்போதாவது தூக்கு தண்டனை நிறைவேறுமா? ஒரு சிக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அவர்கள் தப்பிப்பதற்கு இன்னும் ஒரு சட்ட வாய்ப்பு மட்டும் எஞ்சியுள்ளது. அதையும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல் கையில் எடுத்துள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்டு பிறப்பித்துள்ளது.

இதற்கு பல தரப்பு மக்களும், பாதிக்கப்பட்ட தரப்பும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கில் இப்போதாவது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா, என்றால் அதிலும் ஒரு சட்ட சிக்கல் எழுகிறது.

ஓடும் பஸ்சில் மிருகமாக மாறிய 6 பேர்.. நிர்பயாவுக்கு நடந்த கொடூரம்.. 4 பேருக்கு தூக்கு! நடந்தது என்ன?ஓடும் பஸ்சில் மிருகமாக மாறிய 6 பேர்.. நிர்பயாவுக்கு நடந்த கொடூரம்.. 4 பேருக்கு தூக்கு! நடந்தது என்ன?

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான, ஏ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் இந்த வழக்கில் மிகுந்த அழுத்தம் கொடுப்பதன் காரணமாக, வழக்கு பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 மறு சீராய்வு மனு

மறு சீராய்வு மனு

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர். ஒருவேளை இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் அது விசாரணையில் இருக்கும்போது குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது. எனவே நான்கு பேரையும் தூக்கிலிட கூடிய தேதி என்பது தள்ளிபோகும் வாய்ப்பு உள்ளது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

மறுசீராய்வு மனுவை பரிசீலனை செய்து தூக்கு தண்டனையை குறைக்கவும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் பொதுவாக ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதற்கு எதிராக தொடரப்படும் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்வதுதான் வழக்கம். அப்படித்தான் இந்த வழக்கிலும் ஏற்கனவே செய்து விட்டது. அதற்கு பிறகு மறு சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு, ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒரு தீர்ப்பை கொடுப்பது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு மட்டுமே.

நிர்பயா வழக்கு

நிர்பயா வழக்கு

எனவே நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட போவது என்னவோ உறுதியாகிவிட்டது. இருப்பினும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது ஜனவரி 22ஆம் தேதிக்குள் டிஸ்மிஸ் செய்யப்படாவிட்டால், தூக்கு தண்டனை தேதி தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nirbhaya convicts lawyer AP Singh says, We will file curative petition in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X