டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"என்னால விதவையா வாழ முடியாது" நிர்பயா கொடூரன் அக்‌ஷய் குமார் மனைவி புனிதா எடுத்த அதிரடி முடிவு!

நிர்பயா குற்றவாளி மனைவி கோர்ட்டில் புது மனு தாக்கல் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "என்னால விதவையா வாழ முடியாது.. அதனால என் கணவருக்கு தூக்கு தண்டனை தருவதற்கு முன்னாடியே எனக்கு அவர்கிட்ட டைவர்ஸ் வாங்கி தந்துடுங்க" என்று நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

நாளை மறுநாள் அதாவது 20-ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படஉள்ளது... இந்த 4 பேருமே தங்கள் தண்டனையை நிறுத்தவும், தாமதப்படுத்தவும் பலவகையில் வக்கீலுடன் போராடி வந்தனர்.. கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்... இதுதான் இவர்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

nirbhaya convicts wife moves court for divorce

ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை எல்லாவித சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன... அதனால் இனி தண்டனையை தள்ளிப்போட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இந்நிலையில் அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா பிகார் மாநிலம் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கணவன் சாவுக்கு பிறகு தான் விதவை என்ற பெயருடன் இந்த சமூகத்தில் வாழ விரும்பவில்லை.. அதனால் தூக்குத் தண்டனை தரப்படுவதற்கு முன்பேயே கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தந்துவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் இதுகுறித்து நாளைய தினம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மனு குறித்து புனிதாவின் வக்கீல் சொல்லும்போது, "அக்‌ஷய் குமாரிடமிருந்து விவாகரத்து பெற அவரின் மனைவிக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில்தான் குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். கணவர் மீது பலாத்காரம், மனித விரோத கொலை குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது" என்றார்.

இந்த வழக்கில் புனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அக்ஷய் குமார் கழுத்தில் தூக்குக் கயிறு இறங்குவதற்குள் புனிதாவின் கழுத்திலிருந்து அவர் கட்டிய தாலி இறங்கியிருக்கும்.

English summary
one of the nirbhaya convicts akshay kumar singh wife asks divorce from him before death penality
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X