டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசு அதிரடி.. நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க.. ஜனாதிபதிக்கு பரிந்துரை

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

    டெல்லியில் இதே டிசம்பர் மாதம் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

    இந்த கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

    4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? சைபராபாத் போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி

    குடியரசுத் தலைவருக்கு

    குடியரசுத் தலைவருக்கு

    இந்த 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். மற்றொரு குற்றவாளியான முகேஷ் கருணை மனு அனுப்ப மறுத்துவிட்டார்.

    தூக்கிட்டு தற்கொலை

    தூக்கிட்டு தற்கொலை

    இனொரு குற்றவாளி ஜெயிலிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். நான்காவது குற்றவாளியான அக்ஷய குமார் சிங்கும் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

    நிராகரிக்க பரிந்துரை

    நிராகரிக்க பரிந்துரை

    இந்நிலையில் வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு இன்று பரிந்துரைத்துள்ளது.

    எண்கவுண்ட்டர்

    எண்கவுண்ட்டர்

    முன்னதாக ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் எண்கவுண்டரில் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    10 நாளில் தண்டனை

    10 நாளில் தண்டனை

    ஹைதராபாத் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்கு உள்ளாகேவே எண்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசு நிர்பயா பலாத்கார குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

    English summary
    Centre Recommends To President Rejecting Mercy Plea Of nirbhaya gang rap Convict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X