டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா? நிர்பயா தாயார் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளை நிர்பயா தாயார் மறுத்துள்ளார்.

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்வரி 8-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் ஒவ்வொருநாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

Nirbhaya mother to contest against Kejriwal in Delhi Assembly Elections?

தற்போது நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரத்தில் டெல்லி அரசு தாமதிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவால் இதில் அரசு தரப்பு எந்த தாமதமும் செய்யவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது! மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது!

இந்நிலையில் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி போட்டியிடுவார் என்கிற தகவலும் பரவியது. இது தொடர்பாக ஆஷா தேவி கூறியதாவது:

எனக்கு அரசியலில் எந்த ஒரு விருப்பமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரிடமும் நான் பேசவும் இல்லை.

எனக்கு தேவை என்னுடைய மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பதுமட்டும். என் மகளின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இவ்வாறு ஆஷா தேவி கூறினார்.

English summary
Nirbhaya mother Asha Devi has denied that she will contest against Delhi CM Kejriwal in Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X