டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: ரூ.10,000 கோடி முதலீட்டில், வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மேலும் சில புதிய ஊக்க அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வீட்டுவசதி துறை சார்ந்த அறிவிப்புகள் முக்கியமானவை.

Nirmala Sitharaman announces Rs 10,000 crore special window for housing projects

நடுத்தர வருவாய் பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டி வழங்க ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நாட்டில், 5 முக்கிய துறைகளில் பொருட்கள் நுகர்வு குறைந்துள்ளது.

வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்படும் என உறுதியளிக்கிறேன். வரி செலுத்துவதில் சிறு தவறுகள் நேர்ந்தாலும் தண்டனைகள் வழங்கப்படுவது நீக்கப்படும்.

துபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

2020ம் ஆண்டு நான்கு இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும். மலிவு விலையில் வீடுகளைத் தேடும் நடுத்தர குடும்பங்களுக்கு, ஒற்றை சிறப்பு சாளரம் வசதி அமைக்கப்படும். இது மக்களுக்கு உதவும் வகையில், வங்கி மற்றும் நிதித்துறை, அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டிருக்கும்.

என்.பி.ஏ (வருவாய் வராத வீடுகள்) மற்றும் என்.சி.எல்.டி திட்டங்களுக்கான கடைசி மைல் நிதி தேவைகளுக்கு இந்த விண்டோவிற்கு, அரசு சார்பில் ரூ .10,000 கோடி ஒதுக்கப்படும். வீட்டிலிருந்து வாடகை வருவாய் கிடைக்காத நிலையிலோ, அல்லது, வீட்டு வசதித் திட்டங்கள் முழுமையடையாவிட்டால், அவர்கள் அப்போது இந்த சாளரத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
Government announces Rs 10,000 crore special window for completion of non-NPA housing projects, The last-mile funding will be for projects that are non-NPA and non-NCLT and are net worth positive in affordable and middle income category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X