டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இந்தியாவுக்கு சாதகமான திசையில் திருத்தம் நடக்கிறது'.. நிர்மலா சீதாராமன் உற்சாகம்

Google Oneindia Tamil News

டெல்லி: மூடிஸ் அமைப்பு இன்று இந்திய பொருளாதாரத்திற்கான முந்தைய 9.6% எதிர்மறை வளர்ச்சியிலிருந்து 8.9% எதிர்மறை வளர்ச்சியை மறுபரிசீலனை செய்துள்ளது. ஏஜென்சிகளின் இந்த மதிப்பீடுகள் கூட இந்தியாவுக்கு சாதகமான திசையில் திருத்தங்கள் நடக்கிறது என்பதைக் குறிக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, வங்கி கடன் வளர்ச்சி, அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு போன்றவற்றால் , வலுவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நம் நாடு செல்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் நிலை குறித்தும் சீரடையவைக்கும் முயற்சியாக 2வது பேக்கேஜ் திட்டங்களை பற்றியும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

வீடு கட்டுவோருக்கு, வீடு வாங்குவாருக்கு சூப்பர் சலுகை.. நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரணம்! வீடு கட்டுவோருக்கு, வீடு வாங்குவாருக்கு சூப்பர் சலுகை.. நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரணம்!

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

அப்போது அவர் பேசுகையில் , "பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அறிவுப்புகளை வெளியிட உள்ளேன். இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. 2020-21 மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு செல்லும்.

வளர்ச்சி அடையும் துறை

வளர்ச்சி அடையும் துறை

பங்குச்சந்தைகள் தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது, ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. வங்கி கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அந்நிய நேரடிய முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய உள்ளது. வலுவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்கிறோம், கடந்த 10-15 நாட்களில், அதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு நன்மை

தொழிலாளர்களுக்கு நன்மை

68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு கடன்

விவசாயிகளுக்கு கடன்

பிரதமர் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன் கேட்டு இதுவரை 183.14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுவரை பிரதமர் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ .1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது நபார்ட் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் அவசர பணி மூலதனம் ரூ .25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றம் நடக்கிறது

மாற்றம் நடக்கிறது

பல பொருளாதார வல்லுநர்கள் நாட்டின் வளர்ச்சியை அரசாங்கத்தின் இடைவிடாத சீர்திருத்தங்கள் உற்சாகப்படுத்துகிறது என்பதை எழுதி கவனித்து வருகின்றனர்.
மூடிஸ் அமைப்பு இன்று இந்திய பொருளாதாரத்திற்கான முந்தைய 9.6% எதிர்மறை வளர்ச்சியிலிருந்து 8.9% எதிர்மறை வளர்ச்சியை மறுபரிசீலனை செய்துள்ளது.
ஏஜென்சிகளின் இந்த மதிப்பீடுகள் கூட இந்தியாவுக்கு சாதகமாக வளச்சிக்கான திசையில் திருத்தங்கள் நடக்கிறது என்பதைக் குறிக்கிறது" என்றார்.

English summary
Economy has staged a strong recovery with growth in GST collections, bank credit, FDI inflows along with other indicators, says the finance minister Nirmala Sitharaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X