• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

|

டெல்லி: தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது வல்லவனே அரசன் என்ற பொருள் படும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் இன்று 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார் நிர்மலா சீதாராமன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார்.

Nirmala Sitharaman quotes Thirukural in Budget 2021 speech

கடந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சங்கப் புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பி பாடிய புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மறுநாள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற போது பேசிய தி.மு.க எம்.பி., ராசா, அரசின் வரி வசூல் பற்றிய திருக்குறளைச் சுட்டிக்காட்டி பேசினார். யாரிடம் வரி வசூலிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்பதற்கும் புறநானூற்றின் வரிகளுக்கும் தொடர்பில்லை. நிதியமைச்சரின் பிழையை திருத்தி திருக்குறளிலிருந்து சரியான வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று சொன்ன அ. ராசா,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு" என்று சொன்னார் அ. ராசா.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, ராஜாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம். அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது என்று அப்போது சொன்னார்.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது ஆத்திச்சூடியில் ஔவையார் கூறிய பூமி திருத்தி உண் என்பதை மேற்கோள் காட்டினார். நிர்மலா கூறுகையில் மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார். எனவே நிலத்தை பயனுள்ள வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதன் பொருள் ஆகும் என்றார். இதைத் தொடர்ந்து திருக்குறளையும் நிர்மலா மேற்கோள் காட்டி பேசினார்.

கல்விக்கு முக்கியத்துவம்...மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் கல்விக்கு முக்கியத்துவம்...மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து"

என்ற குறளை கூறி அதன் பொருளையும் விளக்கினார். அதாவது நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பமான வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு அல்லது காவல் ஆகிய 5 செல்வங்கள் மட்டுமே நாட்டிற்கு அழகு சேர்க்கும். எனவே திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார். மேலும் மோடியை மாமன்னர் என புகழாரம் சூட்டினார்.

சில தினங்களுக்கு முன்பு பொருளாதார ஆய்வாறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்,

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்ற பொருள்படும் திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்த ஆண்டு பட்ஜெட் உரை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருட்களை சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்து செல்வு செய்தலும் வல்லது தான் அரசு என்ற பொருளில் வரும் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman quoted Thirukkural as saying that the ways in which things come to him are superior, compiling the ones that come in a way, keeping the compiled ones from being taken away by others, leaving the ones that are guarded for the sake of virtue, meaning and pleasures, which means the Almighty is the King.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X