டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்கிட்டு நிர்மலா சீரியஸாக பட்ஜெட் வாசிக்க.. இங்கிட்டு கமெண்ட் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்!

2 மணி 15 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார் நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

    டெல்லி: "நிறைய அமைச்சர்கள் சர்க்கரை நோயாளிங்க.. கொஞ்சம் பார்த்து சீக்கிரமா படித்து முடிக்க கூடாதா" என்று 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட்டை வாசித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உரிமையாக கேள்வி கேட்டு ட்வீட் விட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

    போன முறை பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை மிக குறுகிய காலத்தில் தயார் செய்யப்பட்டதாக சொன்னார்கள்.

    அதனால்தானோ என்னவோ, பியூஷ்கோயல் 1 மணி நேரம் 45 நிமிஷத்துக்கு எல்லாம் வேக வேகமாக பட்ஜெட்டை வாசித்து பொறிந்து தள்ளிவிட்டார்.

    இமாலய வெற்றி

    இமாலய வெற்றி

    இந்த முறை பாஜகவின் இமாலய வெற்றியை தொடர்ந்து தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் என்பதால், துறை ரீதியான முக்கிய பிரமுகர்களை நிர்மலா தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி, அதன்பின்னரே பட்ஜெட்டுக்கு அல்வா கிண்டினார். அதனால் பல தரப்பினரிடையே இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

    என்ட்ரி

    என்ட்ரி

    இன்று காலை அவைக்கு வரும்போதே வித்தியாசமாகத்தான் வந்தார் நிர்மலா. பட்ஜெட் என்றாலே நிதி அமைச்சரின் கையில் உள்ள சூட்கேஸ்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, துணிப் பையில் பட்ஜெட் அறிக்கைக்களுடன் நிர்மலாவின் என்ட்ரியே வித்தியாசமாக இருந்தது.

    நிதானம்

    நிதானம்

    வந்து நின்றவர், கையில் பட்ஜெட் அறிக்கையை வைத்து கொண்டு "நிறுத்தி நிதானமாக" வாசித்தார். மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிஷத்துக்கு வாசித்தார். இதற்கு முன்பு இப்படி யாராவது இவ்வளவு பொறுமையை கடைப்பிடித்திருப்பார்களா தெரியவில்லை. பட்ஜெட்டை வாசித்துவிட்டு அமைச்சர்கள் அவையை விட்டுக்கூட வெளியேறவில்லை. அதற்குள் கமெண்ட்கள் ட்வீட்களாய் பறக்க ஆரம்பித்துள்ளன.

    சர்க்கரை நோயாளிகள்

    "நிறைய அமைச்சர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருக்கிறார்கள்.. கொஞ்சம் கேப் விட்டு படிச்சால் நல்லா இருக்குமே என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகூட பரவாயில்லை.. மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களில் வேகவேகமாக பேசுவார்களே, அப்படி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தால்கூட நன்றாக இருந்திருக்குமே என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

    தூக்கம்

    இப்படி ட்வீட் போட்டு கலாய்ப்பது பாஜக தரப்பை சேர்ந்தவர்கள்தான் என்பது வேடிக்கையே.. டிவியை பார்ப்பவர்களே இப்படி கலாய்க்கிறார்கள் என்றால், உள்ளே இருந்தவர்கள் நிலைமை?! அதிலும் நிர்மலா சீதாராமனுக்கு பின்னால் இருந்த ஒரு அமைச்சருக்கு தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் முடியலை!

    English summary
    Finance Minister Nirmala Sitharaman read budget for 2 hrs 15 mins and public tweet about this time duration
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X