டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது தமிழர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020 : Nirmala Sitharaman will launch the budget today

    டெல்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது தமிழர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.

    நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2-வது மத்திய பட்ஜெட் இது.

    Nirmala Sitharaman sixth Tamilian Union Finance Minister to present Budget today

    நாடு விடுதலை அடைந்த போது நேரு அமைச்சரவையில் முதல் நிதி அமைச்சராக பதவி வகித்தவர் தமிழரான ஆர்.கே. சண்முகம் செட்டியார். நாட்டின் முதலாவது பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

    அவருக்குப் பின்னர் 1957-58; 1964- 66 கால கட்டங்களில் மத்திய அமைச்சராக இருந்தவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி. அவர் 2 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    1975-77-ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் சி. சுப்பிரமணியம். அவருக்குப் பின்னர் 1980-82-ல் நிதி அமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஆர். வெங்கட்ராமன். பின்னர் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்றார். இதுவரை ப. சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ல் மீண்டும் பதவியேற்ற போது நிதி அமைச்சராக தமிழரான நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது 2-வது முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்,

    English summary
    Union Finance Minister Nirmala Sitharaman today will present her Second budget.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X