டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தற்போதைய பொருளாதார மந்தநிலையை சரி செய்ய முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு துறைகள் மிகப் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கின்றன.

Nirmala Sitharaman to address Press Conference tomorrow

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால்தான் பொருளாதாரம் சரிவை சந்தித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் பொருளாதார நிலைமையை சீரமைக்க தொழில்துறைக்கு சலுகைகள். வங்கிகள் இணைப்பு என ஏற்கனவே பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் டெல்லியில் நாளை மீண்டும் பத்திரிகையாளர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.

நாளைய சந்திப்பிலும் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்த பல கருத்துகள் பெரும் சர்ச்சையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Finace Minister Nirmala Sitharaman to address a Press Conference tomorrow to announce important decisions of the Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X