டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News Live: வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

    டெல்லி: இந்தியா சமீப காலமாக பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் தொழில் முதல் பிஸ்கெட் தயாரிப்பு தொழில் வரை நசிவடைந்துள்ளது. இந்த பொருளாதார சரிவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் காரணம் என்று ஒரு தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில், பொருளாதார பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பல சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். உடனடி தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    Newest First Oldest First
    6:30 PM, 23 Aug

    பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன்
    6:25 PM, 23 Aug

    பொதுத்துறை நிறுவனங்களின் செலவுகளை அமைச்சரவை கண்காணிக்கும் - நிர்மலா சீதாராமன்
    6:25 PM, 23 Aug

    அறிவிக்கப்பட்ட அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் நிறைவேற்றப்படும் - நிர்மலா சீதாராமன். 2020 மார்ச் வரை வாங்கப்படும் பிஎஸ்4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்.
    6:25 PM, 23 Aug

    முதலீடு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான கேஒய்சி தளர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்
    6:18 PM, 23 Aug

    வாகனங்களுக்கான பதிவுகட்டண நடைமுறையில் மாற்றம் - நிர்மலா சீதாராமன் ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020 வரை நிறுத்தப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
    6:13 PM, 23 Aug

    தொடர்ச்சியான கடன் உதவிகளுக்கு கேஒய்சி நடைமுறை நீக்கப்படும் - நிர்மலா ஆட்டோமொபைல் துறைக்கான சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார் நிர்மலா சீதாராமன்
    6:01 PM, 23 Aug

    ஜிஎஸ்டி ரிபண்ட் தொகை தொடர்பான முடிவுகள் 30 நாட்களில் எடுக்கப்படும்
    6:00 PM, 23 Aug

    பொதுத்துறை வங்கிகளின் மூலதன ஊக்கத்திற்காக ரூ.70000 கோடி ஒதுக்கீடு
    5:59 PM, 23 Aug

    பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும் - நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் - நிர்மலா சீதாராமன்
    5:58 PM, 23 Aug

    வீட்டு கடன், வாகன கடன் வட்டிகள் உடனடியாக குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:55 PM, 23 Aug

    ரேபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் - நிர்மலா சீதாராமன் ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை - நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும் - நிர்மலா சீதாராமன்
    5:52 PM, 23 Aug

    தொழில்துறைக்கான மூலதன நிதி திரட்டும் முறைகள் எளிதாக்கப்படும் - நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு மூலம் மக்கள் உடனடியாக பலன் பெற நடவடிக்கை - நிர்மலா சீதாராமன் சிறு, குறு தொழில் தொடங்க எளிதாக கடன் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:46 PM, 23 Aug

    பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஊக்கங்கள் தரப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:46 PM, 23 Aug

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தை செயல்படுத்தாத பெரு நிறுவனங்கள் மீது இனி நடவடிக்கை இல்லை. இதற்காக இனி பெரு நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை கிடையாது - நிர்மலா சீதாராமன்.
    5:43 PM, 23 Aug

    வெளிநாடு முதலீடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பு நீக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:42 PM, 23 Aug

    நீண்ட கால, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீது இனி வரி கிடையாது - நிர்மலா சீதாராமன். வரி விதிப்பு முறையில் மாற்றங்களை அறிவித்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.
    5:39 PM, 23 Aug

    ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    5:38 PM, 23 Aug

    ஜிஎஸ்டியில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:37 PM, 23 Aug

    ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும் - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும் - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை - நிர்மலா சீதாராமன்
    5:34 PM, 23 Aug

    தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்
    5:27 PM, 23 Aug

    நிதி சீரமைப்பு பணிகள் வழக்கம் போல தொடரும்- நிர்மலா சீதாராமன்
    5:27 PM, 23 Aug

    பொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை - நிர்மலா சீதாராமன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்
    5:26 PM, 23 Aug

    தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்
    5:25 PM, 23 Aug

    உலக அளவில் இப்படி வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல - நிர்மலா சீதாராமன் சர்வதேச ஜிடிபி மொத்தமாக குறைய வாய்ப்புள்ளது - நிர்மலா சீதாராமன்
    5:24 PM, 23 Aug

    வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது - நிர்மலா சீதாராமன் அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்துள்ளது - நிர்மலா சீதாராமன்
    READ MORE

    Nirmala sitharaman to meet the press over indian economics
    English summary
    Nirmala sitharaman to meet the press over indian economics you can take inputs from this live page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X