டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரி செலுத்துவோருக்கான சலுகைகள்... லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் இன்று மசோதா தாக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரி, ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு சலுகைகளை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்திருந்தது. வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டது.

Nirmala Sitharaman to Move Bill for Relief to Taxpayers

காலதாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கான அபராதம் 12%-ல் இருந்து 9% விழுக்காடாகவும் குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்கியது இந்த அவசர சட்டம்.

சீனா ஊடுருவல்- ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அறிக்கை தாக்கல்சீனா ஊடுருவல்- ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அறிக்கை தாக்கல்

பிரதமரின் நிவாரண நிதியான பிஎம் கேர்ஸ்-க்கு நன்கொடை அளிப்போருக்கு வருமான வரி விலக்கு சட்டத்தின் கீழ் 100% வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

Nirmala Sitharaman to Move Bill for Relief to Taxpayers

இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக வரி செலுத்துவோருக்கான சலுகைகள் தொடர்பான மசோதாவை இன்று லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman will introduce the Taxation and Other Laws Bill will replace the ordinance issued to provide compliance relief to taxpayers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X