டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்ல செய்தி.. கடன் வரம்பு உயர்வு, திவால் சட்டம்.. அடுத்தடுத்து அறிவித்து அசத்தும் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ம் கட்ட மற்றும் இறுதி கட்டமாக சுயசார்பு இந்தியா திட்டத்தின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கல்விக்கு தனிசேனல், 100 நாள் வேலைக்கு 40000 கோடி, சுகாதாரத்துறைக்கு 15000 கோடி, நிறுவனங்கள் மீதான திவால் நடவடிக்கை ஓராண்டுக்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

Recommended Video

    பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை கடந்த 4 நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 4வது நாளான நேற்று பாதுகாப்பு, மின்சாரம், அணுசக்தி, நிலக்கரி, உள்ளிட்ட 8 துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அவர் கூறினார்

    மேலும் சமூக உள்கட்மைப்பு உடனடியாக பூர்த்தி செய்யப்படும் என்றும் இதற்கான திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

     நிறுவனங்களுக்கான திவால் தட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு நிறுவனங்களுக்கான திவால் தட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    நிலக்கரி துறை தனியார்

    நிலக்கரி துறை தனியார்

    இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்றும், மேலும் 3விமானங்களை பராமரிக்கவும் செயல்படுத்தவும் தனியார் நிறுனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். அத்துடன் நாட்டில் 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும் என்றும் அறிவித்தார். பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49% முதல் 74% வரை உயர்த்தப்படுவதாக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    நிதியமைச்சர் பேச்சு

    நிதியமைச்சர் பேச்சு

    இந்நிலையில் இன்று பொருளாதார சிறப்பு சலுகை திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பதாக கூறியிருந்தார். இதன்படி காலை 11 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு அறிவித்த 2000 ரூபாய் நிதியுதவி மற்றும் ஜன்தன் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 500 நிதியுதவி மற்றும் இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

    அரிசி பருப்பு

    அரிசி பருப்பு

    அதன்பின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில். "8.19 கோடி விவசாயிகளுக்கு 16,294 கோடி உதவி நேரடியாக சென்றுள்ளது. நாட்டின் மூலை முடுக்குளில் கூட மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. அரிசி, கோதுமை, பருப்பு அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது, ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். 20 கோடி பெண்களுக்கு மொத்தம் ரூ.10,025 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 6.81 கோடி பயனாளர்களுக்கு இலவச சிலண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    40000 கோடி ஒதுக்கீடு

    40000 கோடி ஒதுக்கீடு

    12லட்சம் பேர் இபிஎப்ஒ மூலம் தொழிலாளர்கள் பணத்தை எடுத்துள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இதற்கான 85 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.4,113 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 61000 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது கூடுதலாக 40000 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    15000 கோடி ஒதுக்கீடு

    15000 கோடி ஒதுக்கீடு

    கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு பிரதமர் ஏற்கனவே ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் 15 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் கரீப் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ரூ50 லட்சம் இன்சூரன்ஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார ஆய்வகங்கள் வட்ட அளவில் அமைக்கப்படும். தொற்று நோய் தடுப்பு மையங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்படும்.

    தனித்தனி சேனல்

    தனித்தனி சேனல்

    கல்வி தொலைக்காட்சி நாளொன்றுக்கு 4 மணி நேரம் ஒளிபரப்பப்படும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும். ஒவ்வொரு வகுப்பும் ஒரு டிவி சேனல் தொடங்குப்படும். நாட்டின் 100 பல்கலைக் கழகங்கள் மே 30-ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க உள்ளன. ஆன்லைன் கல்வி திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக மின் பாடங்கள் உருவாக்கப்படும்.

    திவால் நடவடிக்கை

    திவால் நடவடிக்கை

    கொரோனா ஊரடங்கில் கடன்களை கட்ட முடியாத நிலை இருந்தாலும் அவற்றுக்கு எதிரான திவால் நடவடிக்கைகள் ஒராண்டுக்கு மேற்கொள்ளப்படாது. மேலும் இதுவரை சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முன்பு ரூ 1 லட்சம் வரை வசூல் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே அவற்றை திவாலானதாக அறிவித்து வந்தோம்.
    இனி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை வசூல் செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே நிறுவனங்கள் திவாலானதாக இனி அறிவிக்கப்படும்.

    ஜிஎஸ்டி பகிர்வு

    ஜிஎஸ்டி பகிர்வு

    மத்திய அரசிடம் நிதிபற்றாக்குறை இருந்த போதும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இதில் நாங்கள் எங்கள் கடமையாகச் செய்துள்ளோம். ரூ .12,390 கோடி மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன; ஏப்ரல் மாதத்தில் ரூ .46,038 வரி பகிர்வு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

    5 சதவீதம் வரை கடன்

    5 சதவீதம் வரை கடன்

    அங்கீகரிக்கப்பட்ட வரம்பில் 14% மட்டுமே மாநிலங்கள் இதுவரை கடன் வாங்கியுள்ளன. இருப்பினும், மாநிலங்களின் கடன் வரம்பை அதிகரிக்க மாநிலங்கள் மாநிலத்திடம் கோரியது போல, 2020-21 நிதியாண்டில் இது 3% முதல் 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 3% அடிப்படையில் 2020-21க்கான மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு ரூ .6.41 லட்சம் கோடி ஆகும். மாநிலங்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, கடன் வரம்புகளை 5% ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ .4.28 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன், தொழில் தொடங்க ஏதுவான சூழல், மின் பகிர்மானம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தினால் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம்.

    தனியார் மயம்

    தனியார் மயம்

    ஒரு புதிய பொதுத்துறை கொள்கையை அறிவிக்கும். அரசு- பொது நலனில் இருக்க வேண்டிய திறன்முறை திட்டங்களின் பட்டியல் அறிவிக்கப்படும். திறன்முறை திட்டங்களின்படி குறைந்தது 1 நிறுவனமாவது பொதுத்துறையில் இருக்க வேண்டும், ஆனால் தனியார் துறை அனுமதிக்கப்பட வேண்டும். பிற துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்"

    தனியார் நிறுவனங்கள்

    தனியார் நிறுவனங்கள்

    இப்போது, இந்திய பொது நிறுவனங்கள் தங்கள் பத்திரங்களை நேரடியாக வெளிநாட்டு அதிகார வரம்புகளில் பட்டியலிடலாம். பங்குச் சந்தைகளில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை பட்டியலிடும் தனியார் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக கருதப்படாது" இவ்வாறு கூறினார்.

    English summary
    Union Finance Minister Nirmala Sitharaman will address the media on Sunday at 11 am for 5th tranche of economic package
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X