டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஸ்ரீராமஜெயம்".. ராமர் கோயில் பூமிபூஜையையொட்டி அரிசி மாவில் கோலம் போட்ட நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அரிசி மாவினால் ஸ்ரீராமஜெயம் என எழுதி கோலமிட்டிருந்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வெள்ளியினாலான 40 கிலோ செங்கல்லை நட்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. முதலில் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய மோடி, பின்னர் அயோத்திக்கு வந்தடைந்தார்.

Nirmala Sitharaman tweets about Rangoli at her home

கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். மற்றபடி நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் தங்கள் பகுதிகளில் ராமர் படங்களை நிறுவி அதற்கு பூஜைகளை செய்தனர்.

 அயோத்தி மட்டுமல்ல.. சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி கோகாய் அயோத்தி மட்டுமல்ல.. சபரிமலை, ரஃபேல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி கோகாய்

அது போல் பல்வேறு இடங்களில் வீடுகளில் அரிசி மாவை கொண்டு கோலங்கள் போடப்பட்டிருந்தன. இதனால் அயோத்தி மட்டும் அல்ல இந்தியாவே விழாக் கோலம் பூண்டிருந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது வீட்டில் போடப்பட்ட ரங்கோலியை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Nirmala Sitharaman tweets about Rangoli at her home

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பொதுவாக பல வீடுகளில் அன்றாடம் அரைக்கப்படும் அரிசி மாவினை கொண்டு ரங்கோலியோ அல்லது கோலமோ போடப்படும். இன்று எங்கள் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அரிசி மாவில் கோலம் போட்டுள்ளோம் என கூறிய நிர்மலா சீதாராமன், அதில் ஸ்ரீராமஜெயம் என எழுதியிருந்தார்.

Recommended Video

    29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி

    English summary
    Finance Minister Nirmala Sitharaman tweets about Rangoli at her home expressing Sri Ramjayam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X