டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: இப்போதுதானே பட்ஜெட் தாக்கல் செய்தீர்களா அப்போது பொருளாதாரத்தை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி அறிவிக்காமல் தாமதமாக இன்று கொண்டு அறிவிக்கிறார்களே, என்ற நிருபரின் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார்.

    பொருளாதாரச் சூழ்நிலை மிக மோசமாக சென்று கொண்டிருக்க கூடிய நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் திடீரென டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.

    அப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில கூடுதல் வரிகளை அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். கார்கள், வீடுகள் போன்றவற்றுக்கான கடனுக்கான வட்டியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    சலுகைகள்

    சலுகைகள்

    ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சலுகைகளையும் அவர் அறிவித்தார் கிட்டத்தட்ட மற்றொரு பட்ஜெட் உரை போல அமைந்தது நிர்மலா சீதாராமனின் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பு.

    நிருபர்கள் சந்திப்பு

    நிருபர்கள் சந்திப்பு

    இதற்கு பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஒரு நிருபர் பளிச்சென்ற கேள்வியொன்றை எழுப்பினார்.
    பொது பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டு மாதங்கள் கழித்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை இப்போது அறிவிக்கிறார்கள் என்றார் அவர்.

    சரிவடைய காத்திருந்தீர்களா

    சரிவடைய காத்திருந்தீர்களா

    எதற்காக மூன்று மாத காலம் பொருளாதாரம் சரியட்டும் என்று காத்து இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அதிருப்தி அடைந்தார் நிர்மலா சீதாராமன். அது அவர் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது.

    பதில்

    பதில்

    "தொழில்துறை சரிவுகள் தொடர்பாக இப்போது விவரம் கிடைத்தது. யாராவது பொருளாதாரம் சரிவு அடையட்டும் என்று பார்த்து கொண்டு இருப்பார்களா" என்று கறாராக பதிலுக்கு கேள்வி எழுப்பி விட்டு, அடுத்த கேள்வியைக் கேட்குமாறு, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    English summary
    Nirmala sitharaman upset with a reporter over a question on Economics slump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X