டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலா சீதாராமனின் "20 லட்சம் கோடி" பிரஸ்மீட்.. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்.. நல்ல மாற்றம்!

ஹிந்தி, ஆங்கிலத்தில் நிதி அறிவிப்பு குறித்த உரை நிகழ்த்தப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆற்றிய உரை பக்கா இந்தியில் இருந்ததால் பலருக்கும் அது புரியவில்லை என்று சலசலப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டியில் இந்தியுடன்,ஆங்கிலமும் கலந்து வந்ததால் வரவேற்பைப் பெற்றது.

Recommended Video

    சிறு குறு தொழில் முனைவோருக்கு சலுகை.. இன்னும் என்னென்ன சலுகைகள்?

    கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    nirmala sitharamans announcements are in hindi and english languages

    அந்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் எந்தெந்த வகைகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இந்த பேட்டியே பைலிங்குவலாக அதாவது ஆங்கிலமும், இந்தியும் கலந்து போய்க் கொண்டிருந்தது. நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்திலும், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹிந்தியிலும் அறிவித்தனர்.

    நேற்றிரவு பிரதமர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினார்.. நன்கு தெம்பு தரக்கூடிய பேச்சுதான் அது.. இருந்தாலும் மொத்த பேச்சையும் ஹிந்தியிலேயே பேசி முடித்தார். சுத்தமாக இது பலருக்கும் புரியவில்லை.

    வழக்கமாக பிரதமர் அறிவிப்பு என்றாலும் சரி, நிதியமைச்சர் அறிவிப்பு என்றாலும் சரி, நாட்டு மக்கள் காதை தீட்டி வைத்து கொண்டு கேட்பார்கள்., அதற்கு காரணம் இப்போதுள்ள நாட்டின் பாதக நிலைமைதான்.. ஆனாலும் இவர்கள் பேசுவது எப்போதுமே அனைத்து தரப்பினருக்குமே புரிவதில்லை.. குறிப்பாக ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு எதுவும் விளங்குவதில்லை.

    நேற்று பிரதமர் பேசியதற்கே ஆளாளுக்கு கமெண்ட்களை பதிவிட ஆரம்பித்தனர்.. "பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு எந்த மொழியில் பேசினார்" என்று குஷ்புவும் கேள்வி எழுப்பியிருந்தார்... எச்.ராஜா இதை பற்றி கருத்து சொல்லும்போது, முதலில் தமிழில் டைப் செய்ய பழக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.. அதற்கு குஷ்புவோ, நான் தமிழில் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும் என்றால், பிரதமர் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அது தான் பழமையான மொழி, இந்தி ஏன்? என்றும் கேட்டிருந்தார்.

    பேஷ் பேஷ்.. நிர்மலா சீதாராமனின் மாஸ்க்கை கவனிச்சீங்களா.. சுயசார்பை செயலில் காட்டி அசத்தல்! பேஷ் பேஷ்.. நிர்மலா சீதாராமனின் மாஸ்க்கை கவனிச்சீங்களா.. சுயசார்பை செயலில் காட்டி அசத்தல்!

    பொதுமக்களில் பலரோ, 'கியா, சோறு நஹி... கியா காசு நஹியா என்று கேள்விகளை எழுப்பினர்.. இன்னும் பலரோ, அடுத்தமுறை பேசும்போது சப்டைட்டில் வைக்கவும் என்று கோரிக்கை விடுத்து கமெண்ட்களை பதிவிட்டனர். இந்த நிலையில் இன்று ஆங்கிலமும், இந்தியும் கலந்த பேட்டியாக இன்றைய பேட்டி அமைந்தது. என்ன சொல்கிறார்கள் என்பதை கொஞ்சமாவது புரிந்து கொள்ள இது உதவியது.!

    English summary
    nirmala sitharamans announcements are in hindi and english languages
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X