இவருக்கு கொரோனா வரலையாம்.. காரணம் இதுதானாம்.. தப்பி தலைமறைவான நித்தி பேசுற பேச்சைப் பாருங்க!
டெல்லி: கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி நான் தனியாக தனிமைப்படுத்திக் கொண்ட போது மக்கள் என்னை பார்த்து சிரித்தார்கள், ஆனால் இன்று பாருங்கள் ஒட்டுமொத்த உலகமும் தனிமைப்படுத்துதல் குறித்து பேசிவருகிறது என நித்யானந்தா சைக்கிள் கேப்பில் தனது தலைமறைவை நியாயப்படுத்தியுள்ளார்.
Recommended Video
பெங்களூர், குஜராத் மட்டுமில்லாமல் சர்வதேச போலீஸுக்கே நித்தியானந்தா தண்ணீர் காட்டி வருகிறார். பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு ஆகியவற்றில் விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருக்கும் நித்யானந்தா கைலாசா என்ற தனிநாட்டை அவர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். அதோடு அந்த நாட்டுக்கான பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை வெளியிட்ட அவர் அந்த நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இன்டர்போல்
இதையடுத்து நீதிமன்ற கெடுபிடியை அடுத்து சர்வதேச போலீஸார் நித்தியை தேடி வருகின்றனர். எனினும் அவர் ஹாயாக அவரது தொலைக்காட்சி சேனல்களிலும் சமூகவலைதளங்களிலும் சத்சங்கம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ட்விட்டரில் அண்மையில் நித்தி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் என்னை கொரோனா எப்போதும் தாக்காது.

பச்சைப்பட்டினி விரதம்
பச்சைப்பட்டினி விரதத்தை 28 நாட்கள் அனைவரும் மேற்கொண்டால் கொரோனா இந்த உலகத்தை விட்டே ஓடிவிடும் என ஐடியா கொடுத்துள்ளார். ஒரு பக்கம் மாட்டு கோமியம் குடித்தால் வராது என்கிறார்கள் மறுபக்கம் தாயத்து கட்டினால் வராது என்கிறார்கள். நித்தியோ விரதம் இருக்க சொல்கிறார். யார் சொல்வதை கேட்பது என தெரியாமல் மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமே தனிமை
இந்த நிலையில் இன்றைய தினம் ட்விட்டரில் நித்யானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் கைலாசாவில் என்னை தனிமைப்படுத்திக் கொண்ட போது எல்லாரும் சிரித்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்ப என்னாச்சு, உலகமே தனிமைப்படுத்துதல் குறித்து பேசி வருகிறது.

குற்றவாளிகள்
பரமசிவன்தான் என்னை காப்பாற்றினார், இதுதான் கடவுளின் சக்தி. இப்படிக்கு நித்யானந்தா பரமசிவம், பிரதமர், ஸ்ரீ கைலாசா என குறிப்பிட்டுள்ளார். தான் தப்பி தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என்பதை மறந்து நித்யானந்தா இவ்வாறு பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகைலாசா
இவ்வாறிருக்கையில் இவரை பாலோ செய்யும் ட்விட்டர்வாசிகள் என்ன சொல்லியுள்ளனர் என்பதை பார்ப்போம். ஒருவர் நீர் ஒரு தீர்க்கதரிசி அப்படியே ஓடிடு என கூறியுள்ளார், அதற்கு நித்தியோ ஸ்ரீ கைலாசாவுக்கு வாருங்கள், உங்களை பரமசிவன் காப்பாற்றுவார் என கூறியுள்ளார். இன்னொருவர் இது பிரதமர் நித்யானந்தாவின் தொலைநோக்கு பார்வை என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications