இருக்கு நான் அள்ளி முடிஞ்சிக்கிறேன்.. நீ ஏன் வயிறு எரியுற? அப்படி பேசிய நித்யானந்தாவா இப்படி? கடவுளே
டெல்லி: நித்யானந்தாவுக்கு என்னாச்சு, அவர் உண்மையிலேயே பணத்திற்காக கஷ்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர் பேசிய பழைய வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் என பல வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு தப்பி சென்று தலைமறைவானார்.
ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்
சுமார் 5 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்யானந்தா, கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நாட்டிற்கு தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார்.

விலைவாசி உயர்வு
கொரோனா, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, உள்நாட்டுபோர் என உலக மக்கள் கவலையில் இருந்த நிலையில் அன்றாடம் ஒரு வேடத்தில் தோன்றி ஜாலியாக இருந்தார். அவர் பேசும் ஆங்கிலத்தை காண இளைஞர்கள் ஆர்வம் காட்டி அவரை போலவே பேசி மகிழ்ந்தனர்.

சூரிய உதயம்
சூரிய உதயத்திற்குள் தான் ஒரு தியானத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நாள் தியானம் மேற்கொள்ள தாமதமாகிவிட்டதாகவும் இதனால் சூரியனே தாமதமாக உதித்ததாகவும் கட்டுக்கதைகளை அப்படியே மக்கள் நம்பும்படியாக சொல்லி வந்தார். கைலாசாவில் உள்ள நித்யானந்தாவின் வாழ்வியல் முறை குறித்து புகைப்படம் வெளியிட்டதே இல்லை.

சத்சங்கம்
ஆனால் அவர் பக்தர்களுக்கு நாள்தோறும் சத்சங்கம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பரமசிவன், பராசக்தியின் பேரருளால் கால பைரவர் என்னையும் சங்கத்தையும் நேரடியாக காப்பாற்றி வருகிறார். அவரே பர்சனலா ஃபீல்டில் இறங்கி பார்த்துக் கொள்கிறார். ஆல் ஆஃப் யூ அன்டர்ஸ்டாண்ட்! என்னவானாலும் பார்ரா தினம் ஒரு கெட்டப்பை போட்டுகிட்டு ஜில் ஜில்னு உட்கார்ந்து அவர் பாட்டுக்கு கலகலனு இருக்காரு சொல்றாங்க.

நீ ஏன் வயிறெரியுற
இருக்குது முடிஞ்சிக்கிறேன். நீ ஏன் வயிறெரியுற. முடிஞ்சா நீயும் ஜாலியா இருந்துகோ என நித்யானந்தா தெரிவித்த பழைய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதை பார்க்கும் போது நித்யானந்தா வெளிநாட்டில் ஜாலியாக இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் அது உண்மை இல்லை. வெளிநாட்டுக்கு தப்பி வந்ததால் இந்தியாவில் உள்ள பணத்தை இழந்துவிட்டார்.

வருமானம் இல்லை
மேலும் அவர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறக்கட்டளைகளை திறந்த போதிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதால் வேறு நாடுகளுக்கும் செல்ல முடியவில்லை. காலநிலை மாற்றம், உணவு உள்ளிட்டவைகளால் நித்யானந்தாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக எலும்பும் தோலுமாக இருந்த நித்தியானந்தாவின்புகைப்படம் வெளியானது. கையெழுத்தை கூட நித்யானந்தா அடித்தல் திருத்தலுடன் எழுதியுள்ளார். இதனால் அவர் உண்மையிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு பணத்திற்கு கஷ்டப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.