டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூராப் பக்கமும் ரோஜா பூவைப் போடு.. அதுதான்ய்யா காதலர் தினம்.. ஹய்யோ ஹய்யோ நித்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லா பக்கமும் ரோஜா பூவை போடுறதுதான் காதலர் தினம் என தனக்கே உரிதான ஸ்டைலில் நித்யானந்தா விளக்கமளித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாளை காதலர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தங்கள் அன்பை வெளிப்படுத்த காதலர்கள் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.

இன்னும் சிலர் சினிமா தியேட்டர்கள், பார்க், பீச், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வர். கடந்த 2019-ஆம் ஆண்டு காதலர் தினத்தையொட்டி மேற்கண்ட அனைத்து இடங்களிலும் காதலர்கள் கூட்டம் அலைமோதின.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவியதை அடுத்து இந்தக் கொண்டாட்டங்கள் சிறிது கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு காதலர் தினம் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா

சுற்றுலா

கொரோனாவால் சுற்றுலா துறை, வணிகம், தியேட்டர்கள், ஆடை, அணிகலன்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்தன. இந்த முறை கொரோனா குறைந்து தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், காதலர் தினம் என வரிசையாக கொண்டாட்டங்கள் இருந்து வருவதால் நலிவடைந்த தொழில்கள் சிறிது தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜாப்பூக்கள்

ரோஜாப்பூக்கள்

இந்த நிலையில் பிப்ரவரி 14, அதாவது காதலர் தினம் என்றால் என்ன என்பது குறித்து நித்யானந்தா தனது வீடியோவில் கூறுகையில் பிப்ரவரி 14 என்றால் என்ன? அனைத்து பக்கங்களிலும் ரோஜாப்பூக்களை தூக்கி வீச முயற்சிப்பதுதான். அதுதான் பிப்ரவரி 14.

அவதார புருஷர்கள்

அவதார புருஷர்கள்

ஆண்கள் பிப்ரவரி 14ஐ கொண்டாடுவார்கள். அவதார புருஷர்கள் சிவராத்திரியை கொண்டாடுவார்கள் என தெரிவித்துவிட்டு தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்தார். என்ன ஸ்டைலான சிரிப்பு! இதற்கு ரஜினியின் தர்பார் படத்தில் வரும் தலைவா.. தலைவா பின்னணி இசை என வீடியோ அமர்க்களமாக உள்ளது.

English summary
Nithyananda says about What is February 14? Everyone throws rose in every corner, he says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X