• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

லவ் லவ் லவ்!.. சமாதியில் இருந்து வரங்களை கொடுப்பேன்.. 11 மணி இரவில் பகீர் கிளப்பிய நித்யானந்தா

Google Oneindia Tamil News

டெல்லி: நான் சமாதியில் இருந்து வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவற்றை வழங்குவேன் என இரவில் நித்யானந்தா பகீர் கிளப்பியுள்ளார்.

உலகே மாயை என்பார்கள். அந்த வகையில் தற்போது ஒரு தீவே மாயையாகவும் அதில் வசிக்கும் ஒரு நபர் குறித்த தகவல்களும் மாயையாகவும் இருக்கிறது. நாம் சொல்ல வருவது யாரை என்பது புரிந்து விட்டதா.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை

ஷாத்ஷாத் நித்யானந்தாவேதான். அவரும் அவர் வசித்து வருவதாக சொல்லப்படும் கைலாசா தீவும் மாயையாகவே உள்ளது. காரணம் கைலாசா எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை.

அதிபர்

அதிபர்

அந்த நாட்டின் அதிபர் என கூறிக் கொண்ட நித்யானந்தா கடந்த 6 மாதங்களாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார். அவரது உடல்நலனுக்கு என்னவென்றே தெரியவில்லை. ஆனால் அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் நார்மலாகவே இருக்கிறது என்கிறார். ஆனால் அவர் ஏன் வீடியோவில் தோன்றவில்லை என தெரியவில்லை.

நகர முடியவில்லை

நகர முடியவில்லை

கன்னித்தீவு கதைக்கு கூட ஒரு முடிவு இருக்கும். ஆனால் இந்த கைலாசாவுக்கு ஒரு என்ட் கார்டே இல்லாமல் உள்ளது. வழக்கமாக சத்சங்களில் பங்கேற்காமல் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா பதிவுகளை போட்டு வருகிறார். அவரால் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு நகர கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு இட்லி

ஒரு இட்லி

தன்னால் ஒரு இட்லியை கூட முழுசாக சாப்பிட முடியவில்லை என்றும் 20 நிமிடங்கள் கூட தொடர்ந்து தூங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் சமாதியின் உள்ளே இருந்து நேரடி கவரேஜ் என போட்டுள்ளார்.

  பணம் அனுப்ப வேண்டாம்.. Nityananda-க்கு என்ன ஆச்சு? #Nithyananda | Oneindia Tamil
  சமாதி என்றால் என்ன

  சமாதி என்றால் என்ன

  சமாதியின் உண்மையான அர்த்தம் என்னவெனில் சம+ ஆதி. அனைத்தும் சம நிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோ மெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சம நிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும். வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேணடும். இதன் பொருள் என்னவெனில் உடலில் தேங்கியுள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது.

  நச்சுத்தன்மை

  நச்சுத்தன்மை

  உடல் முற்றிலும் நச்சுத்தன்மை பெறுகிறது. அதனால்தான் வெளிப்புற உணவு இல்லை அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். இட கல நாடி, பிங்கல நாடி, சூஷூம நாடி ஆகிய 3 நாடிகளும் சமநிலை பெறுகின்றன. இதனால் சுவாசம் மற்றும் தசாப்பிராணஙகள் சீரமையும். கர்மாக்கள் சுத்திகரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

  பிரார்த்தனைகள்

  பிரார்த்தனைகள்

  நான் இந்த சமாதி நிலையில் இருக்கும் போது மக்கள் கேட்ட வரங்கள், பிரார்த்தனைகள் , விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றம். நான் சமாதியில் இருக்கும் போது மக்களின் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே நான் பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்து விட்டேன்.

  சீடர்கள்

  சீடர்கள்

  நான் சமாதியில் இருக்கும் போது வெறுப்பாளர்களுக்கும் எதிரிகளுக்கும் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, மற்றும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொருவராகப் பார்க்கிறேன். பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் என் அன்பு மீண்டும் பொழிகிறது என அந்த பதிவில் நித்யானந்தா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

  English summary
  Self Styled Godman Nithyananda says about why he is in Samadhi state and all the people desires will fulfilled in this state.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X