டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Poll முடிவுகளால் நித்தி ஷாக்.. இந்தியாவுக்கு வரும் திட்டம் இல்லையாம்.. பகீர் முடிவுக்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: தான் இந்தியாவுக்கு திரும்பி வரும் போது யார் பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் ஆடி போன நித்யானந்தா தான் இந்தியாவுக்கு வரும் திட்டத்தையே கைவிட்டு விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நித்யானந்தா. இவர் இன்னமும் போலீஸ் கையில் சிக்காமல் உள்ளார்.

அண்மையில் கூட குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு ஆசிரமத்தில் குழந்தைகளை அடைத்துவைத்திருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கலாய்த்தல்

கலாய்த்தல்

எனினும் நித்யானந்தா தலைமறைவாகவே இருந்து வருகிறார். ஆயினும் அவர் போலீஸாரையோ மற்றவர்களையோ கலாய்ப்பதை விடவே இல்லை. ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கிறார். பிஎம்ஓ கைலாஷ் என்ற ட்விட்டர் ஹேண்டிலில் அவர் தான் இந்தியா திரும்பும் போது யார் பிரதமராக இருப்பர் என கேள்வி கேட்டு அதற்கு 4 ஆப்ஷன்களையும் அளித்துள்ளார்.

20 சதவீதம்

20 சதவீதம்

அதில் டொனால்ட் டிரம்ப், ராகுல் காந்தி, நரேந்திர மோடி, சசிகலா ஆகிய 4 ஆப்ஷன்கள் உள்ளன. இதில் இரு ஆப்ஷன்கள் கூட பரவாயில்லை. ஆனால் மீதம் உள்ள இரு ஆப்ஷன்களை பார்த்தாலே தலை சுற்றுகிறது. எனினும் இவர் கேட்ட 4 ஆப்ஷன்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. டிரம்ப் பிரதமராக இருப்பார் என 12 சதவீதம் பேரும், ராகுல் காந்தி பிரதமராக இருப்பார் என 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

523 வாக்குகள்

523 வாக்குகள்

அது போல் நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என 28 சதவீதம் பேரும் சசிகலா தான் பிரதமர் என 40 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். இந்த கேள்விக்கு மொத்தம் 523 பேர் வாக்களித்துள்ளனர். மோடி, ராகுல் கூட ஓகே. ஆனால் சம்பந்தமே இல்லாமல் டிரம்பையும் சசிகலாவையும் இந்த ஆப்ஷனில் கோர்த்துவிட்டதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

கைது

சசிகலா ஏற்கெனவே முதல்வராக தயார் நிலையில் இருந்த போதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். இதில் பிரதமர் பதவி வேறயா என சசிகலா ஆதரவாளர்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்கிறது. இந்த கணிப்பு முடிவுகளை டேக் செய்து நித்யானந்தா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு திரும்பி வரும் திட்டம் ஏதும் எனக்கு இல்லை. தமிழக மக்களை காப்பாற்றுவது எனக்கு முக்கியமானது என நித்தி தெரிவித்துள்ளார்.

English summary
Nithyananda says that he dont have any plan to back to India. As it is important to him to save the Tamilnadu people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X