டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நித்தியானந்தாவுக்கு.. கை நிறைய காசு சேர்ந்திருச்சாம்..கரன்சி ரெடியாம்.. அறிவிக்கப் போறாராம்!

Google Oneindia Tamil News

டெல்லி: விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு குறித்து நித்தியானந்தா முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nithyananda அதிரடி | Reserve Bank Of Kailasa | Oneindia Tamil

    பெங்களூரில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் நித்தியானந்தா. இவருக்கு குஜராத்திலும் ஒரு பிடரி ஆசிரமம் உள்ளது. இவருக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள்.

    இந்த நிலையில் பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆனாலும் தனது சேனலில் லைவில் தினம் தோன்று ஏதேனும் கருத்துகளை தெரிவித்து வந்தார். இவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    சிதையாமல் அப்படியே இருந்தது.. கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்.. தமிழன் விட்டுச்சென்ற நாகரீகம்! சிதையாமல் அப்படியே இருந்தது.. கீழடியில் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள்.. தமிழன் விட்டுச்சென்ற நாகரீகம்!

    நித்தி

    நித்தி

    இந்த நாட்டுக்கு வர முன்பதிவு செய்யவும் நித்தி அறிவுறுத்தியிருந்தார். அதிலும் தினமும் லட்சக்கணக்கானோர் பதிவு செய்வதால் சர்வரே தாறுமாறாக குழம்பிவிட்டதாகவும் அலப்பறை செய்தார். கைலாசா நாட்டின் பிரதமர் தான் என்றும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

    லைவ்

    லைவ்

    இந்த நிலையில் சிறிது காலமாக அவர் பாட்டுக்கு தான் உண்டு , தன் வேலையுண்டு என லைவில் சொற்பொழிவு மட்டும் நடத்தி வந்தார். தற்போது அவர் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

    நல்ல காரியங்கள்

    நல்ல காரியங்கள்

    நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது.

    எல்லாம் சட்டப்படி

    எல்லாம் சட்டப்படி

    கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின் படியே தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    English summary
    Nithyananda says that he has some important announcement on Vinayagar Chathurthi and he has started Reserve Bank of Kailasa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X