என் உடலில் மத்தவங்க ரத்தம் கலக்க கூடாது.. திருவண்ணாமலைக்கு போகணும்.. அடம் பிடிக்கும் நித்யானந்தா?
டெல்லி: நான் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும். என் குரு அருணகிரி யோகேஸ்வரனை பார்க்க வேண்டும் என நித்யானந்தா தனது நெருக்கமான சீடர்களிடம் நச்சரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசியலை காட்டிலும் அண்மைக்காலமாக ஹாட் டாப்பிக்காக இருப்பது நித்யானந்தாதான். அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது அவரது தோற்றத்திலிருந்து தெரிகிறது.
பாலியல் வழக்கில் தப்பி கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்யானந்தாவின் மருத்துவ பரிசோதனைகள் நார்மலாக இருந்த போதிலும் அவரது உடலுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி எழுகிறது.
கைலாசா தீவா? நீங்க வேற.. நடுக்கடலில் சிங்கம் பட வில்லன்

நித்யானந்தாவுக்கு என்னாச்சு
நித்யானந்தாவுக்கு தைராய்டு, கல்லீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, கேன்சர், ரத்தக் கட்டி உள்ளிட்டவை எதுவும் இல்லாத போது அவரால் ஏன் சாப்பிட முடியவில்லை என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது. பம்பரம் போல் சுழலும் நித்யானந்தா, தற்போது எலும்பும் தோலுமாக படுத்த படுக்கையாக இருப்பது சீடர்களை வேதனைக்குள்ளாக்குகிறதாம்.

மருத்துவர்கள்
மருத்துவர்களாக இருந்து சீடர்களாக வந்தவர்கள் நித்யானந்தாவின் உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் தங்கியிருக்கும் இடத்தில் பெரிய மருத்துவமனை இல்லை என்பதை அவரே கூறியுள்ளார். இதனால் நித்யானந்தாவை மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாற்ற சீடர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.

உடல் சோர்வு
தனது உடல் சோர்வை களைக்க தனது நரம்பில் டிரிப்ஸ் ஏற்றக் கூடாது. யாருடைய ரத்தத்தையும் என் உடலில் கலக்க கூடாது என்ற கண்டிஷன்களை போடும் நித்யானந்தா, தன்னை எப்படியாவது திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லுங்கள், நான் எனது குரு அருணகிரி யோகேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்கிறாராம்.

பாலியல் வழக்கு
ஆனால் பாலியல் வழக்கு, கடத்தல் வழக்கால் கைதுக்கு பயந்து 5 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் தற்போது திருவண்ணாமலைககு சென்றால் போலீஸார் சும்மா இருப்பார்களா? கைது செய்தால் என்ன செய்வது, இவ்வளவு நாள் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகிவிடும். மேலும் நீங்கள் இழந்த பணம், செய்த செலவு எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடும் என சீடர்கள் ஆலோசனை சொல்கிறார்களாம். நான் பரமசிவனின் அவதாரம் என்னை கைது செய்ய மாட்டார்கள் என சத்சங்கத்தில் பேசுவது போல் படுத்த படுக்கையாக இருந்தும் பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.