டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை வாழ்த்திய "கைலாசா நாட்டு அதிபர்" நித்தி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபராகவும் துணை அதிபராகவும் பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கும் கமலா ஹாரீஸுக்கும் கைலாசாவில் நித்யானந்தாவிடமிருந்து வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

    அமெரிக்க அதிபருக்கு கைலாசா அதிபர் வாழ்த்து: நித்தியின் பரபரப்பு கடிதம்!

    அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் பிரளயத்திற்கு பிறகு டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு சென்றார். இந்த நிலையில் நாடாளுமன்ற அவை ஜோ பிடன் வெற்றியை உறுதி செய்த நிலையில் அவர் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

    அது போல் துணை அதிபராக கமலா ஹாரீஸும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உலகம் எங்கும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், சினிமாத் துறையினர் என வாழ்த்தி மகிழ்ந்தனர்.

    பைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளோம்... இந்திய தூதரின் அட்டகாசமான வாழ்த்துபைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளோம்... இந்திய தூதரின் அட்டகாசமான வாழ்த்து

    கமலா ஹாரீஸ்

    கமலா ஹாரீஸ்

    அந்த வகையில் ஸ்ரீகைலாசாவிலிருந்தும் ஜோ பிடனுக்கு வாழ்த்துச் செய்தி போயுள்ளது. அந்த கடிதத்தில் நமது நித்யானந்தா கூறுகையில், அன்பான அதிபரே துணை அதிபரே, பழமை, இந்து மதம், நாகரீகமான தேசம் ஆகியவற்றின் தலைமையிடமான ஸ்ரீகைலாசா உங்களை வாழ்த்துகிறது.

    ஆசிர்வாதங்கள்

    ஆசிர்வாதங்கள்

    உலகெங்கும் வாழும் 2 பில்லியன் இந்து மதத்தை பின்பற்றுவோர் சார்பில் இந்த கைலாசாவும் வாழ்த்துகிறது. 46 ஆவது அதிபராக ஜோபிடனும், 49-ஆவது துணை அதிபராக கமலா ஹாரீஸும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு எனது ஆசிர்வாதங்கள்.

    நல்லிணக்கம்

    நல்லிணக்கம்

    உங்கள் தலைமை அமெரிக்காவை செல்வச் செழிப்பாக கொண்டு செல்லும் என நம்புகிறேன். மேலும் உங்களால் அமெரிக்க குடிமக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. உலகில் பெரும் தலைமையாகவும் வழிகாட்டியாகவும் அமெரிக்கா தொடர்ந்து வகிக்கட்டும். நம் உலகில் அமைதி, வளம் , நல்லிணக்கம் தழைக்க உதவட்டும் என தெரிவித்துள்ளார் நித்தி.

    கைலாசாவுக்கு தனிக் கொடி

    கைலாசாவுக்கு தனிக் கொடி

    கைலாசாவை தொடங்கிய நிலையில் அந்நாட்டு அதிபர் தாம்தான் என பிரகடனம் செய்து கொண்டவர் நித்தியானந்தா. கைலாசாவுக்கென தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், நாணயம், பொருளாதார கொள்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டவர் நித்யானந்தா.

    English summary
    Nithyananda wishes American President Joe Biden and Vice President Kamala Harris for taking the responsibilty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X