டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு மோசமான பின்னடைவு.. அதிர்ச்சி பட்டியல்

Google Oneindia Tamil News

டெல்லி: சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3-வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அண்டை மாநிலமான கேரளா சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் மாநிலமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

பொதுவாக சுகாதாரத்துறையில் தமிழகம் சிறந்த விளங்குவதாக கூறப்படுவது உண்டு. வெளிநாட்டினரும் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து செல்லும் தலைநகர் சென்னை மருத்துவ நகராக விளங்குகிறது.

மேலும் தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு நமது மாநிலத்தை பாராட்டியும் உள்ளது.

9வது இடத்தில் தமிழகம்

9வது இடத்தில் தமிழகம்

அப்படிப்பட்ட நம் மாநிலம் கடந்த முறை சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களில், நாட்டிலேயே 3வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை 9 வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது. ஒட்டுமொத்த செயல் திறன் குறியீட்டு எண் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரமான மாநிலங்கள்

சுகாதாரமான மாநிலங்கள்

2015-16-ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு, 2017-18 குறிப்பு ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் வைத்து, நிதி ஆயோக் சுகாதார செயல் திறன் அடிப்படையில் மாநிலங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள். யூனியன் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் நிதி ஆயோக் சுகாதாரம் குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆந்திரா 2வது இடம்

ஆந்திரா 2வது இடம்

சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தை கேரளாவும், இரண்டாம் இடத்தை ஆந்திராவும், மூன்றாவது இடத்தை மகாராஷ்டிரா மாநிலமும் பிடித்துள்ளது. இதில் கேரளாவின் ஒட்டு மொத்தசெயல் திறன் மற்றும் குறியீட்டு மதிப்பெண் 74.01 ஆக உள்ளது.

காஷ்மீர் 7வது இடம்

காஷ்மீர் 7வது இடம்

சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் 4வது இடத்தை பிரதமர் மோடியின் சொந்தமாநிலமான குஜராத் பிடித்துள்ளது. 5வது இடத்தை பஞ்சாப் மாநிலமும், 6வது இடத்தை இமாச்சல் பிரதேசமும் பிடித்துள்ளது.7வது இடத்தை ஜம்மு காஷ்மீர் மாநிலமும், 8வது இடத்தை கர்நாடகாவும் பிடித்துள்ளது.

கடைசி இடத்தில் உ.பி.

கடைசி இடத்தில் உ.பி.

ஆனால் தமிழகம் கடந்த முறை3வது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த முறை 9வது இடத்துற்கு பின் தங்கி உள்ளது. ஒட்டுமொத்த செயல் திறன் குறித்த குறியீட்டு மதிப்பெண் கடந்தமுறையைவிட இந்த முறையவிட 2.97 புள்ளிகள் குறைந்து, 60.41 ஆக உள்ளது தெலுங்கானா மாநிலம் 10வது இடத்தையும், மேற்கு வங்காளம் 11வது இடத்தையும், அரியானா 12வது இடத்தையும் பிடித்துள்ளது. பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முறையே 19 மற்றும் 20வது (கடைசி இடங்கள்) இடங்களை பிடித்துள்ளன.

English summary
NITI Aayog Health Index: tamil nadu get 9th rank, Kerala is firt, UP last, Madhya Pradesh, Odisha, Uttarakhand, Uttar Pradesh and Bihar have shown no improvement in health status
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X