டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. நிதி ஆயோக் குழுவின் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Niti Aayog meeting will be held today

இதில் பங்கேற்க ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றே டெல்லி சென்றுவிட்டார். இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே இந்தக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்கபோவதில்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது பலனற்றது என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Niti Aayog meeting will be held today. Many states Chief Ministers and Governors will be participating in the Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X