டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன நடக்குது? நிதின் கட்கரியை பாராட்டி டேபிளை தட்டிய சோனியா.. வியந்து பார்த்த பாஜகவினர்!

மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரியை பாராட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மேஜையை தட்டியது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரியை பாராட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி லோக்சபாவில் மேஜையை தட்டியது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை விட பாஜகவின் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிதான் லைம் லைட்டில் இருக்கிறார். லோக்சபா தேர்தலில் பாஜகவில் நிதின் கட்கரி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இதற்கு ஏற்றபடி, நிதின் கட்கரியை கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். பாஜகவில் நிதின் கட்கரி மட்டுமே கொஞ்சம் தைரியம் கொண்டவர் என்று குறிப்பிட்டார். மோடியின் மதிப்பை குறைக்கும் வகையில் ராகுல் இப்படி பேசி இருந்தார்.

என்ன விவாதம்

என்ன விவாதம்

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து துறையில் என்னுடைய அமைச்சரவை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. பல மாநில மக்கள் எங்களை பாராட்டி வருகிறார்கள், என்று கூறினார். இதை கேட்டு பாஜகவினர் தங்கள் பெஞ்சை தட்டி வாழ்த்தினார்கள். ஆச்சர்யமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மேஜையை தட்டி நிதின் கட்கரியை பாராட்டினார்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இதை அறிந்து மற்ற காங்கிரஸ் கட்சியினரும் மேடையை தட்டி நிதின் கட்கரியை பாராட்டினார்கள். இதை பார்த்ததும் பாஜகவினர் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி அடைந்தனர். அட எதிர்க்கட்சியினர் இப்போது ஏன் நிதின் கட்கரியை பாராட்டுகிறார்கள் என்று தெரியாமல் பாஜகவினர் குழம்பினார்கள். இது தற்போது பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.

மிகவும் நட்பானவர்

மிகவும் நட்பானவர்

நிதின் கட்கரியை, பொதுவாக பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பேசுவது வழக்கம். இரண்டு தலைவர்களும் எப்போதும் மற்ற கட்சியினருடன் அதிக நட்பு பாராட்டுவார்கள். மோடி, அமித் ஷா போல எதிர்கட்சியினருடன் விலகி இருக்காமல் நிதின் கொஞ்சம் நட்பாக இருக்க கூடியவர்.

உதவும்

உதவும்

நிதின் கட்கரியின் இந்த பண்பு பாஜக லோக்சபா தேர்தலின் போது பெரும்பான்மை பெறவில்லை என்றால் உதவும் என்கிறார்கள். அதாவது பாஜக லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றால் கண்டிப்பாக நிதின் கட்கரிதான் பிரதமர் ஆவார் என்று கூறுகிறார்கள். அப்போது நிதின் கட்கரிக்கு நெருக்கமாக இருக்கும் பாஜகவின் கூட்டணியில் இல்லாத சில கட்சிகள் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி கூட நிதின் கட்கரியை தூக்கி வைத்து பேசுவதும் கூட மோடியின் மதிப்பை குறைக்கத்தான் என்கிறார்கள்.

English summary
BJP minister Nitin Gadkari’s gets Desk Thumps from Sonia Gandhi goes BJP shocked - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X