டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி.. நிதின் கட்கரி யாரும் வேண்டாம்.. மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!

லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெஜாரிட்டி இல்லையெனில் இவர்தான் பிரதமர்.. பாஜக திட்டம்!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் செய்ய வேண்டிய பேச்சுவார்த்தைகளை இப்போதே எதிர்க்கட்சிகள் தொடங்கிவிட்டது.

    இதற்காக வரும் மே 21ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த உள்ளது. மொத்தம் 21 மாநில கட்சிகள் இதில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடடா, பிரதமர் மோடியா இது.. பவ்யமாக ஆளே மாறிப்போய்.. பத்திரிக்கையாளர்களுக்கே ஆச்சரியம்! அடடா, பிரதமர் மோடியா இது.. பவ்யமாக ஆளே மாறிப்போய்.. பத்திரிக்கையாளர்களுக்கே ஆச்சரியம்!

    பாஜக நிலை என்ன

    பாஜக நிலை என்ன

    இதுவரை வெளியான கருத்து கணிப்புகள்படி, இந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அதாவது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காது. இது பாஜகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    இந்த நிலையில் பாஜக மாநில கட்சிகளின் உதவியை நாட வேண்டி இருக்கும். ஆனால் மாநில கட்சிகள் மோடியை மீண்டும் பிரதமராக அமர்த்த ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. இதனால் பாஜக வேறு பாஜக தலைவர்கள் யாரையாவது பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    யார் அது

    யார் அது

    அதன்படி பாஜக அமைச்சர் நிதின் கட்கரியை, பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளது. ஆனால் சமயங்களில் சில மாநில கட்சிகள் இவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இவர் ஆர்எஸ்எஸ் நபர் என்பதால் இவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. பாஜக அல்லாத கட்சியை சேர்ந்த நபர் இதனால் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகிறது.

    நிதிஷ் குமார்

    நிதிஷ் குமார்

    அதன்படி லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடிக்கு கொஞ்சம் எதிரானவர். இதனால் இவரை சில மாநில கட்சிகள் ஏற்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Bihar CM Nitish Kumar may get a chance to become PM If nothing goes well in NDA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X