டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவராக நித்யகோபால் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சம்பத் ராய் தேர்வாகியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்கள் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தையும் ராமர் கோவில் அறக்கட்டளையிடம் ஒப்படைப்போம் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

Nitya Gopal Das named President of the Ram temple Trust

மேலும் ராமர் கோவிலை கட்டுவதற்கான அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்தில் இன்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அறக்கட்டளையின் தலைவராக நித்யகோபால் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் செயலாளராக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சம்பத் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த அறக்கட்டளை பொருளாளராக கோவிந்த் தேவ் கிரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பான ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் கூட்டத்தில் ராமர் கோவிலை கட்டுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

நிர்பேந்திரா மிஸ்ரா

இதனிடையே ராமர் கோவில் கட்டுமான குழுவின் தலைவராக பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிர்பேந்திரா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Nitya Gopal Das named President of the Ram temple Trust, Nitya Gopal Das named President of the Ram temple Trust, Champat Rai named general secretary and Govind Dev Giri named treasure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X