டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஒலி, காற்று மாசு அடியோடு குறைந்தது.. மக்களுக்கு இதுவும் நன்மைதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் நடந்த நல்ல விஷயம் என்னவெனில் வாகன போக்குவரத்து இல்லாததால் காற்று மாசடைவதும், ஓசோனில் ஓட்டை விழுவதும் இன்று ஒரு நாள் தடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க இன்று ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்று காலை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் உள்ள சாலைகள் வெறிச் சோடி காணப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கியது.

பேருந்துகள்

பேருந்துகள்

ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படாததால் நாடு முழுவதும் வாகனங்களில் இயக்கங்கள் இல்லாத நிலை உள்ளது. இதையடுத்து மக்கள் ஊரடங்கினால் கொரோனா பரவல் மட்டும் தடுக்கப்படாமல் பல்வேறு நன்மைகளை கொடுத்துள்ளது. அதாவது சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு மணி நேரத்தில் முக்கிய சாலைகளை 1000 வாகனங்கள் கடக்கும்.

கோளாறுகள்

கோளாறுகள்

இந்த வாகனங்களில் இருந்து கிளம்பும் புகையினால் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸ்சைடுகள் ஆகிய வாயுக்கள் வெளியிடப்பட்டு அவை காற்றில் கலக்கின்றன. இதனால் சுவாச கோளாறுகள், பக்கவாதம், அரிக்கும் தன்மை ஆகியன ஏற்படும்.

புற ஊதா கதிர்கள்

புற ஊதா கதிர்கள்

இந்த நிலையில் வாகன போக்குவரத்து உமிழும் வாயுக்களாலும் குளிர்சாதனபெட்டிகளில் இருந்து உமிழும் குளோரோ புளோரோ கார்பன் எனப்படும் வாயுக்களாலும் ஓசோனில் ஓட்டை விழுவது அதிகரிக்கப்பட்டு பூமியை நோக்கி புற ஊதா கதிர்கள் சூரியனிலிருந்து பூமிக்கு வரும் நிலை உள்ளது. நாடு முழுவதும் பந்த் ஏற்பட்டால் கூட ஏதோ தனியார் வாகனங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களின் புழக்கம் இருக்கும். ஆனால் தற்போது இந்த ஊரடங்கால் கொரோனாவை ஒழிப்பது மட்டுமல்ல சுற்றுச்சூழலும் நன்மை பயக்கிறது.

காற்று

காற்று

டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காற்று மாசு கடுமையாக இருந்ததால். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலானோருக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் கடைகளில் ஆக்ஸிஜன் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒற்றை இரட்டை படை வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கப்பட்டது. இன்று வாகனங்களே இயக்கப்படாததால் டெல்லியில் காற்றானது சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கும்.

English summary
The Curfew not only good for Coronavirus, its good for air pollutiion and sound pollution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X