டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படியெல்லாம் பேசுனாங்க... ஆம் ஆத்மி வேண்டாம் பிளீஸ்... காங். தலைகளை கெஞ்சும் ஷீலா தீட்சித்!

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி அமைக்க டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் மே 12ம் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்தால் 7 தொகுதியிலும் எளிதாக வென்றுவிடலாம் என்று கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். இதற்கு டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சீட் கிடைக்கலை.. மரியாதை கிடைக்கலை.. அதிருப்தியில் அதிமுக தலைகள்.. பகீர் பரபரப்பில் அதிமுக! சீட் கிடைக்கலை.. மரியாதை கிடைக்கலை.. அதிருப்தியில் அதிமுக தலைகள்.. பகீர் பரபரப்பில் அதிமுக!

ஓட்டு பலம்

ஓட்டு பலம்

சமீபத்திய சர்வேயில் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 28 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 22 சதவீதமும், பாஜகவுக்கு 36 சதவீதமும் வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் டெல்லியின் 7 மக்களவை தொகுதியிலும் வெல்ல முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கணக்கு போட்டுள்ளனர்.

கெஜ்ரிவால் விருப்பம்

கெஜ்ரிவால் விருப்பம்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். பாஜவை தோற்கடிக்க டெல்லி, ஹரியான மாநிலங்களில் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் கெஜ்ரிவால் தனது விருப்பத்தை ராகுலிடம் கூறினார். ஆனால் ராகுல் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை. இதனால் விரக்தியில் கெஜ்ரிவால் மொத்தம் உள்ள 7 தொகுதியில் 6 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதனிடையே ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் டெல்லி காங்கிரஸ் தவைர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ ஆர்வமாக உள்ளார். இதேபோல் அகமது படேல், குலாம் நபி ஆசாத் ஆகியோரும் கெஜ்ரிவாலுடன் நல்ல தொடர்பில் உள்ளனர்.

காங்.கூட்டணி அறிவிப்பு

காங்.கூட்டணி அறிவிப்பு

இந்நிலையில் புல்வாமா தாக்குலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் எனற முடிவினை காங்கிரஸ் அதிரடியாக எடுத்தது. இதனால் டெல்லியில் பாஜகவை எதிர்க்க ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பெரும்பாலான தலைவர்கள் விரும்புவிதாகவும், இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை கொள்கை ரீதியாக முடிவு எடுக்க இருப்பதாகவும் சாக்கோ தெரிவித்தார். மேலும் கட்சி தலைமையின் முடிவினை மூத்த தலைவர்கள் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கும் ஷீலா தீட்சித்

எதிர்க்கும் ஷீலா தீட்சித்

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தன்னை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு டெல்லி முதல்வராக மாறிய கெஜ்ரிவாலுடன் கூட்டணி அமைக்க ஷீலா தீட்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு ஷீலா தீட்சித் திங்கள்கிழமை கடிதம் எழுதினார்.

சம்மதிப்பரா ஷீலா

சம்மதிப்பரா ஷீலா

அதில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்றும் டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை, இதனால் ழப்பம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே ஷீலா தீட்சித் உள்பட கூட்டணியை எதிர்க்கும் தலைவர்களை சந்தித்து சர்வே முடிவுகளை விளக்கி காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க பிசி சாக்கோ முயன்று வருகிறார்.

English summary
Former Delhi CM Sheila Dikshit has urged the party leaders not to have alliance with AAP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X