டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறப்பு விருந்தினர் இல்லாமல் நடைபெறும் குடியரசு தின விழா.. பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அது போல் அணிவகுப்பு மரியாதைகளும் மிக குறைந்த நேரமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தினவிழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக இருந்தது.

No Chief guest in Republic Day 2021

ஆனால் பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் குடியரசு தினவிழா இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்கள் இல்லாமலேயே கொண்டாடப்படுகிறது.

அது போல் ராஜபாதையில் பார்வையாளர்களுக்கும் அனுமதி குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. என்னதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அணிவகுப்பு மரியாதையின் பாரம்பரிய குணம் மாறாமல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட குடியரசு தின கொண்டாட்டம் மொத்தமாக மாறப்போகிறது.. காரணம் கொரோனா.. ரூல்ஸ்கள் தெரியுமா? இந்த வருட குடியரசு தின கொண்டாட்டம் மொத்தமாக மாறப்போகிறது.. காரணம் கொரோனா.. ரூல்ஸ்கள் தெரியுமா?

இந்த அணிவகுப்பில் வங்கதேச ராணுவ படையினர் கலந்து கொள்கிறார்கள். விஜய் சவுக்கிலிருந்து தொடங்குகிறது அணிவகுப்பு. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 8.2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அணிவகுப்பு மரியாதை இந்த முறை வெறும் 3.3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லவுள்ளது.

ஆண்டுதோறும் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டோ 25 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவகிறார்கள். அது போல் இணை நோய் உள்ள வயது முதிர்ந்தவர்களும் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் பங்கேற்ற அனுமதி இல்லை.

1966 ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினர் இல்லாமலேயே குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் காலமானதால் இந்திரா காந்தி அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.

அது போல் 1952 ஆம் ஆண்டு மற்றும் 1953 ஆம் ஆண்டுகளிலும் சிறப்பு விருந்தினர் இல்லை. அது போல் இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர் இல்லாமலேயே குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது.

English summary
No Chief guest in Republic Day 2021. It will be a shorter parade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X