Just In
எங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்
டெல்லி: தங்களது நாட்டுக்குள் ஊடுருவி சீனா எந்த ஒரு கிராமத்தையும் அமைக்கவில்லை என்று இந்தியாவுக்கான பூட்டான் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
பூட்டானின் டோக்லாம் பகுதியில் சீனா ஊடுருவி ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது; 2 கி.மீ அளவுக்கு பூட்டான் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தியா- சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்திய பூட்டானின் டோக்லாம் பகுதியில் இருந்து 9 கி.மீ. தொலைவில்தான் இந்த ஆக்கிரமிப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தியாவுக்கான பூட்டான் தூதர், எங்கள் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவல் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.