டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று இன்னமும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின் ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

No community spread in India: Health Minister Harsh Vardhan

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம். உலக மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடு இந்தியா.

நமது நாட்டில் 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் பாதிப்பு என்பதாகவே உள்ளது. இந்தியாவில் 90% கொரோனா பாதிப்பு என்பது 8 மாநிலங்களில்தான் உள்ளது.

கல்லூரி திறப்பதே முடிவு செய்யவில்லை கல்விக் கட்டணம் வசூலிப்பது எப்படி - ஹைகோர்டில் அரசு பதில்கல்லூரி திறப்பதே முடிவு செய்யவில்லை கல்விக் கட்டணம் வசூலிப்பது எப்படி - ஹைகோர்டில் அரசு பதில்

கொரோனா மரணங்களில் 86% 6 மாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனா இன்னமும் சமூகப் பரவலாகவில்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ள்னர்.

ஒருசில உள்ளூர் இடங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அளவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்பது யதார்த்தம்.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.

English summary
Union Health Minister Harsh Vardhan said that No community spread in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X