டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 குட் நியூஸ்.. இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை இருக்கிறது.. சமூக பரவல் இல்லை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சமூக பரவல் என்ற நிலையை கொரோனா தாக்கம் எட்டவில்லை என்ற மகிழ்ச்சித் தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், அதேநேரம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

Recommended Video

    இந்தியா 3வது ஸ்டேஜை எட்டிவிட்டதா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

    2வது மற்றும் 3வது ஸ்டேஜுக்கு இடையே இந்தியா இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் சொல்லியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

    எது நடக்க கூடாது என்று பயந்தோமோ, அது நடந்துவிட்டதா.. 3வது ஸ்டேஜில் இந்தியா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் எது நடக்க கூடாது என்று பயந்தோமோ, அது நடந்துவிட்டதா.. 3வது ஸ்டேஜில் இந்தியா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட்

    குறைவுதான்

    நேற்று, நாங்கள் 16002 சோதனைகளை நடத்தினோம். 2% சோதனை மட்டுமே நேர்மறையாக இருந்தது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் பார்த்தால், தொற்று விகிதம் அதிகமாக இல்லை. எனவே, நாட்டில் இதுவரை சமூக பரவல் இல்லை, பீதி அடையத் தேவையில்லை, ஆனால் விழிப்புடன் இருங்கள்.

    மோதல் கூடாது

    மோதல் கூடாது

    ரேப்பிட் நோயறிதல் கருவிகளும் வர ஆரம்பித்துள்ளன. இன்று, நம்முடைய சவால், உள்ளூர் அல்லது சமூக பரவல்கள் கிடையாது. ஆனால் நாம் அனைத்து வகை முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். COVID19க்கு எதிரான போரில் சுகாதார ஊழியர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்களுடன் எந்தவிதமான மோதல்களிலும் ஈடுபடாதீர்கள். அவர்களின் உற்சாகத்தை குலைத்துவிடாதீர்கள்.

    மருந்துகள்

    மருந்துகள்

    நமக்கு 1 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் தேவைப்படுகின்றன, அதே நேரத்தில் 3.28 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன. எனவே, மாத்திரை பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை, அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்தது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இவ்வாறு ஒரு விளக்கத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Yesterday, we conducted 16002 tests. Only 0.2% cases tested positive. On the basis of the samples collected, the infection rate is not high; Rapid diagnostics kits have also been sanctioned: Lav Agrawal, Jt Secy Ministry of Health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X