டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடம்பெயர் தொழிலாளர் மரணங்களைப் போல விவசாயிகளின் தற்கொலை விவரங்களும் இல்லை- கைவிரிக்கும் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், கொரோனா லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களே இல்லை.

No Data On Farmer Suicides, says Centre in Rajya Sabha

அப்படி என்கிற போது இழப்பீட்டுத் தொகை குறித்து கேள்வியே எழவில்லை என்றது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படைகளில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டன.

தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய அரசு, நாட்டில் நடப்பாண்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரமும் இல்லை என தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மேலும், தேசிய குற்றப் பதிவு ஆணையத்துக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அறிக்கைகளில் விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்திருக்கிறது மத்திய அரசு.

English summary
Centre has no data on farmers suicide, the Rajya Sabha was told in a written reply today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X