டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைக்க அசாமில் தடுப்பு முகாம்? மத்திய அரசு பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை என்று, மத்திய அரசு லோக்சபாவில் இன்று தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை பதிவேடு திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான், நாங்கள் என்று நிரூபிப்பதற்கு பழமையான ஆவணங்களை காண்பிக்க வேண்டி இருக்கும். ஒருவேளை அவ்வாறு காட்டாவிட்டால் தடுப்பு முகாம்களில் அவர்கள் அடைத்து வைக்கப் படுவார்கள் என்ற அச்சம் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

No detention camps constructed in Assam, Centre tells Lok Sabha

அசாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் காரணமாக, பல லட்சம் மக்கள் தங்கள் குடியுரிமை ஆதாரத்தைக் காட்ட முடியாமல் தவித்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இவ்வாறு சட்டவிரோதமாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு தங்க வைப்பதற்கு தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைதுடி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது

முகாம் அமைவது தொடர்பான வீடியோ காட்சிகள் பிபிசி போன்ற ஊடகங்கள் வாயிலாக வெளியாகின. இந்த நிலையில், லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், அஸ்ஸாம் அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் குடியுரிமை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாதவர்களை தடுத்து வைப்பதற்காக அசாமில் பிரத்தியேகமாக எந்தவொரு தடுப்பு முகாமையும் அரசு கட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

English summary
In a written reply to the Lok Sabha, the Centre said that as per the information received from Assam Government, the state has not constructed any detention camp in Assam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X