டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. காற்றில் பரவும் தொற்று நோயா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நான்கு நாட்களில் இரட்டிப்பாகி வருவதுடன், தொற்றுநோய் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் காற்றில் பரவும் நோய் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது,

Recommended Video

    8 கி.மீக்கு கன்டெய்ன்மெண்ட் பிளான்... தமிழக அரசு அதிரடி

    கொரோனா வைரஸ் தொற்று நோய் காற்றில் பரவும் வியாதி அல்ல என்றும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவரிடம் நீர்துளிகள் பரவும் தொற்று நோய் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

    No evidence of coronavirus being airborne, says Dr Raman Gangakhedkar, Head Scientist ICMR

    உலகத்தை அழித்து வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ், ஒருவரின் வாய் மற்றும் மூக்கு, கண் ஆகியவற்றின் நீர் துளிகளில் இருந்தே இன்னொரு ஒருவருக்கு பரவி வருகிறது. இந்நிலையில் காற்றிலும் கொரோனா வைரஸ பரவுவதாக தகவல்கள் வெளியானது. இதை மக்களும் நம்ப தொடங்கினார்கள். ஆனால் அப்படியாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துது.

    இந்நிலையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை அறிஞர் டாக்டர் ஆர் ஆர் கங்ககேத்கர், கொரோனா வைரஸ் என்பது காற்றுவழியாக பரவும் நோய்த்தொற்று அல்ல, ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம் பரவம் நீர்த்துளி தொற்று ஆகும். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளும் பாதிக்கப்படுவர் என்றார்.

    No evidence of coronavirus being airborne, says Dr Raman Gangakhedkar, Head Scientist ICMR

    தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு.. அதிர்ச்சி அளித்த கோவை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு.. அதிர்ச்சி அளித்த கோவை

    இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் 4281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் டெல்லி தப்லீம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அரசு கூறுகிறது. இந்த நோய் தொற்றால் இதுவரை இந்தியாவில் 117 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    “There is no evidence of coronavirus being airborne,” Dr Raman Gangakhedkar, Head Scientist, (ICMR) said at the government’s daily briefing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X