டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த தவறும் நிகழவில்லை.. எப்ஐஆர் அவசியமில்லை.. ரபேல் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்!

ரபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் நிகழவில்லை, அதனால் எப்ஐஆர் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

    டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் நிகழவில்லை, அதனால் எப்ஐஆர் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 5 மறுசீராய்வு மனுக்களில், 4 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.இதன் மூலம் பாஜகவிற்கு மேலே தொங்கிய கத்தி காணாமல் போய் உள்ளது.

    ரபேல் விமான கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடிரபேல் விமான கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி

    ஒரே தீர்ப்பு

    ஒரே தீர்ப்பு

    ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த வழக்கில் நீதிபதி சஞ்சய் கிசான் கவுல் தன்னுடைய தீர்ப்பு மற்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு இரண்டையும் சேர்த்து வழங்கினார். நீதிபதி சஞ்சய் கிசான் தனது தீர்ப்பில் இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கான காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

    அவசியம் இல்லை

    அவசியம் இல்லை

    இந்த ஒப்பந்தத்தில் சந்தேகப்பட கூடிய விஷயங்கள் எதுவும் கிடையாது. விசாரிக்கும் அளவிற்கு எந்த விதமான தவறுகளும் நடந்ததாக தெரியவில்லை. அதனால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    எதுவும் கிடையாது

    எதுவும் கிடையாது

    அதேபோல் நீதிபதி கே எம் ஜோசப் தனது தீர்ப்பில், இந்த ஒப்பந்தத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்கான போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. அதனால் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    English summary
    No fishy in the deal, No FIR needed: What SC said in Rafale verdict today?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X