டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது- மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார்.

லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்றார்.

No Indian Citizenship to Eelam Tamils, says Nityanand Rai

மேலும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்றும் நித்தியானந்தா ராய் திட்டவட்டமாக கூறினார்.

முன்னதாக காலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்த போது திமுக எம்.பி டி.ஆர் பாலு, ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

English summary
Union Minister of State of Home Affairs Nityanand Rai said that No Indian Citizenship to Eelam Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X