டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனா அத்துமீறலை விலாவாரியா விவரிச்சாரே ராஜ்நாத்சிங்.. ஆனா 6 மாதமாக ஊடுருவலே இல்லை என்கிறது உள்துறை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனா எல்லையில் இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதங்களில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கு உள்பட்ட இடத்தை சீனா ஆக்கிரமித்து இருந்தது. இதை நேற்று பகிரங்கமாக ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டு இருந்தார். சுமார் 38.000 சதுர கி. மீட்டர் தொலைவுக்கான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலப்பரப்பை ஆக்கிரமித்து சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து இருந்தது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார்.

No infiltration on Indo-China border in 6 months: MHA in Rajya Sabha

மேலும், இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றார். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்து இருக்கும் பதிலில், ''இந்திய சீனா எல்லையில் இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதங்களாக எந்தவித ஊடுருவலும் இல்லை. சீனாவுடன் நீண்ட நாட்களாக இந்தியா எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

No infiltration on Indo-China border in 6 months: MHA in Rajya Sabha

இதுகுறித்து லோக்சாபாவில் விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நேற்று அழுத்தம் கொடுத்தன. காங்கிரஸ் வைத்திருந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் நேற்று வெளிநடப்பு செய்து இருந்தது.

Recommended Video

    6 மாதமாக China ஊடுருவல் இல்லை - உள்துறை அமைச்சகம்

    மாஸ்கோ பேச்சு முன்... லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு! மாஸ்கோ பேச்சு முன்... லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு!

    English summary
    No infiltration on Indo-China border in 6 months: MHA in Rajya Sabha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X