டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அப்படி செய்வாரா?.. டிரம்பின் ஒரு கேள்வி.. 4 நாட்களில் உடைந்து நொறுங்கிய அமெரிக்க- இந்திய உறவு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் வெறும் நான்கு நாட்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் வெறும் நான்கு நாட்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Trump says they need hydroxychloroquine or India will face retaliation

    இந்தியாவுடன் உறவை வளர்க்கவே நான் இங்கே வந்து இருக்கிறேன். இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமை அடைந்து வருகிறது. கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி. இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு.

    இந்தியர்கள் உலகிற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி....இது இந்தியா வந்த அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி 24ம் தேதி நமஸ்தே மோடி நிகழ்ச்சியில் அகமதாபாத்தில் பேசியது. இப்போது இந்தியாவை பற்றி கேட்டால்.. டிரம்ப் இதே வரிகளை சொல்வாரா என்பது சந்தேகம்தான்!

    சென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்? பரபரப்பு தகவல் சென்னையில் ராயபுரம், பிராட்வே, புதுப்பேட்டையில் அதிகம் கொரோனா பரவ என்ன காரணம்? பரபரப்பு தகவல்

    இந்திய அதீத நட்பு

    இந்திய அதீத நட்பு

    ஒரு காலத்தில் அணிசேரா நாடாக இருந்த இந்தியா பாஜகவின் ஆட்சிக்கு பின் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது. உலகம் முழுக்க இந்தியாவின் முகம் ''அவர்கள் யாருடைய சண்டைக்கும் செல்ல மாட்டார்கள். பெரிய அளவில் மற்ற நாடுகளை எதிர்க்க மாட்டார்கள்'' என்பதுதான். ஆனால் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டிய மோடி, கொஞ்சம் கொஞ்சமாக உலகில் இந்தியாவின் தோற்றத்தை மாற்றினார். துருக்கி, மலேசியா போன்ற நாடுகளை வெளிப்படையாக எதிர்த்தார்.

    ஐநாவில் எப்படி

    ஐநாவில் எப்படி

    ஜி20 நாடுகளில் இந்தியாவிற்கு இருந்த தோற்றத்தை மாற்றினார். முக்கியமாக டிரம்ப் உடனான நெருக்கம் ஆசியாவில் இந்தியாவை கொஞ்சம் தனிமைப்படுத்தியது. இந்தியாவிற்கு உற்ற தோழனாக இருந்த ரஷ்யா கொஞ்சம் விலக தொடங்கியது. சீனாவோ இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை வளர்த்து விட தொடங்கியது. மலேசியா, சீனா, ஈரான், துருக்கி என்று பல நாடுகள் இந்தியாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.

    ஆனால் டிரம்ப் மீது நம்பிக்கை

    ஆனால் டிரம்ப் மீது நம்பிக்கை

    ஆனால் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் மீது தீவிரமாக நம்பிக்கை வைத்தார். அமெரிக்கா இந்தியாவின் நண்பர், டிரம்ப் என்னுடைய நண்பர் என்று பல முறை வெளிப்படையாக மோடி அறிவித்து இருக்கிறார். இதனால்தான் டிரம்பின் இந்திய வருகைக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்தார். ஹவுடி மோடி மூலம் அமெரிக்காவில் டிரம்பிற்கு பிரச்சார மேடை அமைத்துக் கொடுத்தார். பல நாடுகளை பகைத்துக் கொண்டு.. டிரம்பை தன்னுடைய மிக நெருக்கமான நண்பர் போல மோடி நடத்தினார்!

    டிரம்ப் அப்படி செய்யவில்லை

    டிரம்ப் அப்படி செய்யவில்லை

    டிரம்பை தன்னுடைய மிக நெருக்கமான நண்பர் போல மோடி நடத்தினார்.. ஆனால் டிரம்ப் மோடியை அப்படி நடத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பின் சமீபத்திய பேச்சு, அவர் இந்தியாவை அவ்வளவு நட்பான நாடாக பார்க்கவில்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் இன்று மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. தான் பலசாலி என்று மோடி கட்டி வைத்த மொத்த கோட்டையும் உலக அளவில் சரிந்து உள்ளது.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் ஏற்பட்ட சண்டைக்கு முக்கிய காரணம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்துதான். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியா மருந்து ஆகும். இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த டிரம்ப் முடிவெடுத்து உள்ளார். ஆனால் அமெரிக்காவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதிக அளவில் இல்லை. இந்தியாவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நம்பர் 1 நாடு இந்தியாதான்.

    பிரச்சனை வந்தது

    பிரச்சனை வந்தது

    இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உற்பத்தி செய்யும் இந்தியாவை ''எண்ணெய் கிணறுகள் நிரம்பிய ஈரான்'' போல பார்க்க தொடங்கியது அமெரிக்கா. மோடி நம்ம பிரண்ட்தான்.. அவரிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கேட்டால் கொடுக்க போகிறார் என்று அமெரிக்கா நிம்மதியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு தேவை அதிகம் ஆனது. இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.

    ஏற்றுமதிக்கு மொத்தமாக தடை

    ஏற்றுமதிக்கு மொத்தமாக தடை

    எங்களின் தேவைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை உற்பத்தி செய்து வருகிறோம். இதை ஏற்றுமதி செய்ய மாட்டோம். அதேபோல் பாராசிட்டமால் உள்ளிட்ட 24 வகை மருந்துகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்று இந்தியா முடிவெடுத்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவை நிலைகுலைய வைத்தது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினார் . அவர்கள் போனில் கொரோனா குறித்து பல விஷயம் பேசினார்கள்.

    டிரம்ப் சொன்னது

    டிரம்ப் சொன்னது

    டிரம்ப் - மோடி பல விஷயங்களை போனில் பேசினாலும்.. செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் குறிப்பிட்டது ஒன்றை பற்றித்தான்! அது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன். மோடியுடனான போன் உரையாடலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது.

    ஏற்றுமதி செய்யுங்கள்

    ஏற்றுமதி செய்யுங்கள்

    அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்ய கூறியுள்ளோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன். நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை எங்களுக்கு இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இந்திய அரசு இதை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் வெளிப்படையாக, அதே சமயம் கொஞ்சம் சாந்தமாக இந்தியாவிற்கு விடுத்த எச்சரிக்கை இது என்று கூறப்பட்டது.

    காதில் வாங்கவில்லை

    காதில் வாங்கவில்லை

    ஆனால் டிரம்ப்பின் இந்த பேச்சு இந்தியாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. எப்போதும் எதையாவது பேசும் டிரம்ப், இப்போது கொரோனா கோபத்தில் இப்படி பேசி இருப்பார். இந்தியாவை அவர் இப்படி எல்லாம் எச்சரிக்க மாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவர்களின் கனவில் பெரிய கல்லை தூக்கி எறிந்தது டிரம்பின் நேற்று இரவு செய்தியாளர் சந்திப்பு. இந்தியாவிற்கு அதில் டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    மோடி அப்படி சொல்வாரா

    மோடி அப்படி சொல்வாரா

    டிரம்ப் தனது பேச்சில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு இந்தியா தடை விதித்தது தெரியும். அது மற்ற நாடுகளுக்கு மட்டும்தான். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கும் அதே தடையை விதிப்பார் என்று சொல்ல முடியாது. மோடி அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன். மோடி அமெரிக்காவிற்கு எதிராக அப்படி எல்லாம் பேச மாட்டார். அமெரிக்காவிற்கு மட்டும் இந்தியா இந்த தடையை நீக்க வாய்ப்புள்ளது. நான் ஞாயிற்றுக்கிழமைதான் மோடியிடம் பேசினேன். அவர் மிக சிறப்பாக பேசினார்.

    பதிலடி தருவேன்

    பதிலடி தருவேன்

    இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து அவரிடம் நான் பேசி உள்ளேன். தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கிறதா என்று பார்க்கலாம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தால் ஓகே. இல்லையென்றாலும் ஓகேதான். ஆனால் கண்டிப்பாக இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும். கண்டிப்பாக கொடுக்கப்படும், என்று கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.

    இந்தியா பின் வாங்கியது

    இந்தியா பின் வாங்கியது

    அமெரிக்காவின் இந்த மிரட்டலை இந்தியா எதிர்க்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். 56 இன்ச் மார்பு கொண்டவர் என்று புகழப்படும் மோடி, டிரம்பை கண்டிப்பார். கொரோனாவால் அமெரிக்கா உடைந்து போய் உள்ளது. அமெரிக்காவிற்கு மோடி தக்க பாடம் எடுப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இந்தியா அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. மாறாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

    இறுதி முடிவு

    இறுதி முடிவு

    ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம் . மனித நேயத்தை அடிப்படையாக் கொண்டு இந்த முடிவை எடுக்கிறோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் பாராசிட்டமால் ஆகிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    வெறும் நான்கு நாட்கள்

    வெறும் நான்கு நாட்கள்

    வெறும் நான்கு நாட்களில் இந்தியா - அமெரிக்காவின் நட்பில் மொத்தமாக பெரிய விரிசல் விழுந்துள்ளது.

    • ஏப்ரல் 4 - ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.
    • ஏப்ரல் 5- பிரதமர் மோடியிடம் பேசிய அதிபர் டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் வேண்டும் என்று கேட்டார்.
    • ஏப்ரல் 6- ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொடுக்கவில்லை என்றால் பதிலடி கொடுப்போம் என்று இந்தியாவை டிரம்ப் மிரட்டினார்.
    • ஏப்ரல் 7 - அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
    • வெறும் 4 நாட்களில் இத்தனை மாற்றங்கள் நடந்துள்ளது. இதில் இந்தியாவின் பலம் உலக அரங்கில் பெரிதாக சரிந்து விழுந்துள்ளது.

    அமெரிக்க அரசியல்

    அமெரிக்க அரசியல்

    கொரோனாவால் உலகில் அமெரிக்காதான் மோசமாக பாதித்து இருக்கிறது. ஆனாலும் பிரான்ஸ், ஜெர்மனி செல்லும் மருத்துவ பொருட்களை அமெரிக்க அடித்து பிடுங்குகிறது. ஈரானை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மனம் மாற வைத்துள்ளது.. கொரோனா பாதித்தாலும் நான்தான் ''அண்ணன்'' என்பதை நொடிக்கு ஒருமுறை அமெரிக்கா நிரூபித்துத்தான் வருகிறது!

    English summary
    No more Friends?: How Coronavirus and Hydroxychloroquine messed up the Modi - Trump's relationship, they built for years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X