டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிமேல் நமோ கிடையாது நோமோதான்.. மோடியை புதிய ஸ்டைலில் கலாய்த்த ராகுல் காந்தி!

பிரதமர் மோடிக்கு ஆதரவான நமோ (NaMO - Narendra Modi) என்ற பிரபல வாசகத்தை நோமோ (NoMO- No Modi) என்று மாற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியை புதிய ஸ்டைலில் கலாய்த்த ராகுல் காந்தி!

    டெல்லி: பிரதமர் மோடிக்கு ஆதரவான நமோ (NaMO - Narendra Modi) என்ற பிரபல வாசகத்தை நோமோ (NoMO- No Modi) என்று மாற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருக்கும் டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

    லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ரபேல் மற்றும் விவசாய பிரச்சனையை ராகுல் காந்தி கையில் எடுத்து இருக்கிறார். தினமும் இதுகுறித்து அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

    இந்த நிலையில்தான் தற்போது புதிய வரவாக அவர் வேலைவாய்ப்பு பிரச்சனையையும் கையில் எடுத்து இருக்கிறார். இந்தியாவில் நிலவும் மிக மோசமான வேலைவாய்ப்பு தட்டுப்பாட்டை வைத்து அவர் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.

     அறிக்கை தகவல்

    அறிக்கை தகவல்

    தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office's Periodic Labour Force Survey) அமைப்பு வெளியிட்ட வேலைவாய்ப்பு சர்வேயின்படி கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. கடந்த 2017-2018 அறிக்கையின்படி மொத்தம் 6.1 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிகழ்கிறது. இந்திய வரலாற்றில் மிக மோசமானது.

    மோடி என்ன கூறினார்

    மோடி என்ன கூறினார்

    பிரதமர் மோடி 2014 தேர்தலில் போட்டியிட்ட போதே, இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்படும் என்று கூறினார். எல்லா வருடமும் 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினார். ஆனால் மோடி அதில் தோல்வி அடைந்தது தற்போது தெளிவாக வெளியே தெரிந்துள்ளது.

    என்ன சொன்னார்

    இந்த அறிக்கையை தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி டிவிட் செய்து இருக்கிறார். அதில், ''நோமோ ஜாப்ஸ்.. கொடுங்கோலர் மோடி, எல்லா வருடமும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இந்த அறிக்கை மூலம் அவர் தேசிய அளவில் பேரிடரை உருவாக்கியது அம்பலமாகி உள்ளது. வேலைவாய்ப்பின்மை 45 வருடத்தில் இப்போதுதான் அதிகம் உள்ளது. 6.5 கோடி பேர் சென்ற வருடத்தில் மட்டும் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.. மோடி வீட்டிற்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது'' என்று கிண்டல் செய்துள்ளார்.

    கிண்டல் செய்தார்

    கிண்டல் செய்தார்

    பிரதமர் மோடி சென்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது நமோ என்ற வாசகம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. நரேந்திர மோடி என்பதை சுருக்கி நமோ என்று கூறினார்கள். இது இந்து மதத்தின் மந்திரம் போல இருப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதையே ராகுல் காந்தி நோமோ (நோ மோடி) என்று மாற்றி தற்போது டிரெண்ட் செய்து வருகிறார்.

    English summary
    No Namo here after it is NoMo says Congress Chief Rahul Gandhi on Unemployment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X