• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆஹா.. "இவர்" ஏன் அப்படி சொல்றாரு.. குண்டை தூக்கி போட்ட குலாம்நபி ஆசாத்.. மலங்க விழிக்கும் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இப்போதைக்கு தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என்றாலும், வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று சீனியர் தலைவர் குலாம் நபி ஆசாத் சொல்லி உள்ளது, காங்கிரசுக்குள் புயலை கிளப்பி வருகிறது.

வரப்போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.. தேசிய அளவில் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, கடந்த எம்பி தேர்தலில் வெறும் 9.78 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது..

எனவே, இந்த முறையாவது பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கி உள்ளது... அதேபோல, 2019 எம்பி தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தேசிய அளவில் பரவலான அதிருப்திகள் மேலோங்கி வருவதால் அதையும் அறுவடை செய்து கொள்ள கணக்கு போட்டு வருகிறது...

இப்படியா பண்ணுவீங்க; கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம்.. காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா இப்படியா பண்ணுவீங்க; கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம்.. காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா

 வியூகம்

வியூகம்

அதனால், மாநில கட்சிகளை ஒன்றிணைந்து மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் பாஜகவை எதிர்க்கலாம் என்ற வியூகம் வகுத்து வந்தாலும், சரியான தலைமை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாநில கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன... மம்தாவும் ஒதுங்க ஆரம்பித்துள்ளது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் கட்சியை மேலும் சில தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.. அதில் ஒருவர்தான் குலாம்நபிஆசாத்..

 கோரிக்கை

கோரிக்கை

கடந்த வருடம், காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, வலுவான தலைமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, 23 சீனியர்கள் சோனியா காந்திக்கு லெட்டர் எழுதினார்கள்.. அந்த முக்கியமானவர்தான் குலாம் நபி ஆசாத்... இதற்கு பிறகு அக்கட்சியின் காரிய கமிட்டி குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார் ஆசாத்.. எனினும் காங்கிரஸை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. ஜம்மு காஷ்மீருக்கு மறுபடியும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், 370 பிரிவு மறுபடியும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார்.

 ஐடியா இல்லை

ஐடியா இல்லை

இதனால் இவர் எப்போது வேண்டுமானாலும் தனிக்கட்சி ஆரம்பித்துவிடுவாரோ என்ற சந்தேகம் தேசிய அரசியலில் இருந்து கொண்டே உள்ளது.. இது சம்பந்தமாக ஒரு டிவி சேனலுக்கு ஆசாத் பேட்டி தந்துள்ளார்.. அதில் தனிக்கட்சி துவங்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, "இப்போதைக்கு அந்த ஐடியா எனக்கு இல்லை.. ஆனால் அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது... நாம் எப்போது இறந்து போவோம் என்றுகூட யாருக்கும் தெரியாது.

தவறு

தவறு

இன்னைக்கு காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக யாரும் பேசவே முடியல.. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருந்தபோது, தவறு நடந்துவிட்டால், அது தொடர்பாக கேள்வி எழுப்ப எனக்கு அதிகமான சுதந்திரத்தை தந்திருந்தார்கள்.. விமர்சனங்களை பற்றி ஒருபோதும் அவர்கள் கவலைப்பட்டதில்லை... விமர்சனங்களை ஒரு குறையாகவும், குற்றமாகவும் பார்த்தது இல்லை. ஆனால், இன்றுள்ள தலைமை விமர்சித்தாலே குற்றமாக பார்க்கிறது.. யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை.

 ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

என்னையும், ராஜீவ் காந்தியையும் இந்திராகாந்தி அழைத்திருந்தார்.. என்னிடம் முடியாது என்றுகூட அவர் சொல்லி இருக்கலாம்.. இல்லை என்று சொல்வது, நாகரீகம் குறைவான, ஒழுக்கம் குறைவான, மரியாதை குறைவான ஒன்று கிடையாது.. அது கட்சிக்கு நல்லதுதான்... ஆனால், இன்று இல்லை என்ற வார்த்தையை கேட்க ஒருத்தரும் தயாராக இல்லை.. இல்லை இல்லை என்று சொன்னீங்களே, இன்னைக்கு நீங்க இல்லாமலேயே போய்ட்டீங்களே" என்று குலாம் நபி தெரிவித்துள்ளார்.

 அம்ரிந்தர் சிங்

அம்ரிந்தர் சிங்

இந்த பேட்டியை பொறுத்தவரை, புது கட்சியை தொடங்கவே மாட்டேன் என்று குலாம் நபி உறுதியாக சொல்லவில்லை.. ஆனால் அதேசமயம், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று பூடகமாக சொல்லி உள்ளது காங்கிரஸ் மேலிடம் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.. இப்படித்தான், பஞ்சாபில் மாஜி முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும் சொல்லி கொண்டிருந்தார்..

சீனியர்

சீனியர்

காங்கிரஸ் தலைமையிடம் மோதல் போக்கால், கட்சியை விட்டு விலகினார்.. பஞ்சாப் மக்கள் கட்சி என்றும் தொடங்கிவிட்டார்.. அங்கு வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தெரிகிறது.. இதைவிட முக்கியம் அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இப்போது இன்னொரு காங்.சீனியர் தலைவரான ஆசாத்தும், தனிகட்சியை ஆரம்பிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

English summary
No one can say what will happen next in politics, says Ghulam nabi azad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X