டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ. குறித்து அச்சம் வேண்டாம்- மோடியுடனான சந்திக்குப் பின் உத்தவ் தாக்கரே பேட்டி- காங். ஷாக்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்டம் குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசின் சி.ஏ.ஏ.வை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மிக கடுமையாக எதிர்த்து வருகிறது.

No one needs to fear CAA, says Uddhav Thackeray

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்து பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

பிரதமர் மோடியுடனான சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. மகாராஷ்டிரா தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் குறித்து மோடியுடன் ஆலோசனை நடத்தினோம். அதேபோல் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. குறித்தும் மோடியுடன் விவாதித்தோம்.

சி.ஏ.ஏ. குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. என்.பி.ஆர். என்பதும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படபோவதும் இல்லை. மகாராஷ்டிரா கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்வோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

அரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்

உத்தவ் தாக்கரேவின் இந்த பேட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Maharashtra Chief Minister Uddhav Thackeray said that no one needs to fear CAA and NPR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X