டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல்களில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பீகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

No Postal Ballot for Above 65 Years of Age in Polls: EC

தற்போதைய கொரோனா பாதிப்பை முன்வைத்து இந்த தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் தேர்தல் தொடர்பான பணிகளை அரசியல் கட்சிகள் ஜரூராக மேற்கொண்டும் வருகின்றன.

இந்நிலையில் பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

குல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசுகுல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்பதை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிந்தைய தேர்தல்களில் நாடு முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1,000 பேர்தான் வாக்களிக்கலாம். பீகாரில் இதற்கேற்ப 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே பார்முலா கடைபிடிக்கப்பட உள்ளது.

English summary
The Election Commission has decided not to extend the facility of postal ballot to electors above 65 years of age.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X