டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க திட்டமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழியர்களின் ஓய்வு வயதை 60 வயதிலிருந்து 58 ஆண்டுகளாகக் குறைக்க எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் லோக்சபாவில் அனுப்பிய பதிலில், "இப்போதைக்கு ஓய்வு வயதை 60 வயதிலிருந்து 58 ஆண்டுகளாகக் குறைக்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை" என்று தெரிவித்தார்.

No proposal to reduce retirement age of govt employees to 58 years: Jitendra Singh

அடிப்படை விதிகள் 56 (j), மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972 மற்றும் அகில இந்திய சேவைகளின் விதி 16 (3) (திருத்தப்பட்ட) விதிகள் (இறப்பு-ஓய்வு-ஓய்வூதிய நன்மைகள்) விதிகள், 1958, ஆகியவற்றின்படி, அரசு ஊழியர்களை , முன்கூட்டியே ஓய்வு பெற வைப்பதற்கான முழுமையான உரிமை அரசுக்கு உள்ளது,

பொது நலன் கருதி, ஒருமைப்பாடு அல்லது பயனில்லை போன்ற காரணங்களின் அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்குவதன் மூலமோ அல்லது மூன்று மாத ஊதியம் மற்றும் அலவன்சுகளை கொடுப்பதன் மூலம் அறிவிப்பினை அரசால் வழங்க முடியும்.

ஒரு அரசு ஊழியர், குழு 'ஏ' அல்லது குழு 'பி' சேவை அல்லது பதவியில் இருக்கும் போது, கணிசமான பணி திறன் இல்லாமலோ அல்லது குறைந்த திறனோ இருந்தால், அப்படிப்பட்வர் 35 வயதை அடைவதற்கு முன்பு சேவையில் நுழைந்தவராக இருந்தால், பணி நீக்க விதிமுறைகள் பொருந்தும். இதேபோல் வேறு சில சந்தர்ப்பங்களில் இந்த விதிமுறைகள் ஊழியர்கள் 55 வயதை அடைந்தாலும் இது அவர்களுக்கு பொருந்தும்" என்றார். அதேநேரம் ஓய்வு வயதை 60 வயதிலிருந்து 58 ஆண்டுகளாகக் குறைக்க எந்த திட்டமும் அரசிடம் இப்போதைக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

English summary
Presently, there is no proposal to reduce age of retirement on superannuation from 60 years to 58 years," Minister of State for Personnel Jitendra Singh said in a written reply to Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X