• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எனது உருவபொம்மையை எரியுங்கள்.. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாதீர்.. மோடி

|

டெல்லி: எனது உருவபொம்மையை எரியுங்கள். ஆனால் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாதீர்கள் என டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் 175 சதுர கி.மீ.க்கும் மேல் பல்வேறு பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இதில் 1731 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு பட்டா வழங்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று ராம்லீலா மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

சுடவே இல்லை என்ற நிலையில்.. உ.பி.யில் போராட்டக்கார்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ!

பேரணி

பேரணி

டெல்லியில் சட்டவிரோத குடியிருப்புகளை ஒழுங்குப்படுத்துவது மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் உரிமையை பெறுதவற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேரணியை கருத்தில் கொண்டு பல அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

ஒரு கிலோ மீட்டர்

ஒரு கிலோ மீட்டர்

இந்த விழாவில் மோடி 40 லட்சம் மக்களுக்கு பட்டா வழங்கினார். பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி, வெள்ளிக்கிழமை வன்முறை நடந்த டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைந்த தூரத்தில் இருக்கிறது.

ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள்

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து டெல்லியில் உள்ள பெரும்பாலான மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை சந்தித்து வருகிறார்கள். சட்டவிரோதம், சீல் வைப்பது, புல்டோசர், காலக்கெடு ஆகிய வார்த்தைகளை கொண்டே டெல்லி மக்களின் வாழ்க்கையை விவரிக்கலாம். ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டெல்லி மெட்ரோ

டெல்லி மெட்ரோ

அவர்களை சேர்ந்தவர்களுக்கு 2000 சொகுசு பங்களாக்களை சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர். உங்களுக்கு வழங்க வேண்டியது யாருக்கு வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. டெல்லி மெட்ரோவின் 4-ஆவது கட்ட திட்டத்தை டெல்லி அரசு அரசியலாக்கவில்லை என்றால் அதற்கான திட்டங்களை முன் கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இவர்கள் எல்லாம் மக்களின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்.

வதந்தி

வதந்தி

உங்களது வலியும் வேதனையும் அவர்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சில அரசியல் கட்சிகள் மக்களிடம் வதந்தியை பரப்புகின்றன. நான் அவர்களிடம் ஒன்று கேட்கிறேன்.

நாட்டு மக்கள்

நாட்டு மக்கள்

டெல்லியில் சட்டவிரோதமான காலனிகளை ஒழுங்குப்படுத்தியபோது நாம் அவர்களிடம் ஜாதியை கேட்டோமா? நீங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறீர்கள் என நாங்கள் கேட்டோமா?1970, 1980 ஆண்டுகளுக்கான ஆவணங்களை நாம் கேட்டோமா? இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் பலனடைவர். இந்த சட்டத்தை நாங்கள் ஏன் கொண்டு வந்தோம் என்றால் நாட்டு மக்களின் அன்பிற்காக வாழ்கிறோம் என்றார் மோடி.

 
 
 
English summary
Pm Narendra Modi says that No one should damage the public property instead u can burn my effigy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X