டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநிலங்களுக்கிடையே மக்கள் பயணம் செய்யலாம்.. இனி ஈ பாஸ் தேவையில்லை.. மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களுக்கிடையே மக்கள் போக்குவரத்தையும் சரக்குகளின் போக்குவரத்தையும் நாளை முதல் தொடங்கலாம் என்றும் இனி எந்தவித சிறப்பு அனுமதியும் பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Recommended Video

    Unlock 1.0| ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு... மத்திய அரசு உத்தரவு

    நோய் கட்டுப்பாட்டு பகுதி எனப்படும் கண்டெய்ன்மென்ட் சோன்களில் லாக்டவுன் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் அனைத்தும் இயங்கும் விதத்தில் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    UNLOCK 1.0: நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு.. என்னென்ன தளர்வுகள்?UNLOCK 1.0: நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு.. என்னென்ன தளர்வுகள்?

    ரெஸ்டாரன்டுகள்

    ரெஸ்டாரன்டுகள்

    அதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்பட்டுள்ள பகுதிகள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகள் அல்லாத இடங்களில் ஜூன் 8-ஆம் தேதி முதல் மால்கள், ரெஸ்டாரன்ட்டுகள், கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    யூனியன் பிரதேசம்

    யூனியன் பிரதேசம்

    மாநிலங்களுக்கிடையே மக்கள் பயணம் செய்யவும் சரக்குகளை கொண்டு செல்லவும் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது. இந்த போக்குவரத்திற்காக இனி எந்தவித சிறப்பு அனுமதியையும் பெற தேவையில்லை. எனினும் மாநிலங்களுக்கிடையே மக்கள் நடமாட்டம் குறித்து சூழலை ஆய்வு செய்து மாநில அரசுகளோ யூனியன் பிரதேசங்களோ முடிவு செய்து கொள்ளலாம்.

    சொந்த நாடு

    சொந்த நாடு

    அவ்வாறு போக்குவரத்திற்கு அனுமதிக்கும்பட்சத்தில் அவற்றை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். பயணிகள் ரயல், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு பயணிகள் விமானம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது, இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டு பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்புவது ஆகியவை ஒழுங்குப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 265 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு பல தளர்வுகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As per New SOP, there will be no restrictions for Inter state movement of People or Goods. No requirement of E-permit/ approval.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X