டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்ற கேண்டீனில் மலிவு விலை உணவு கட்.. அரசுக்கு ரூ17 கோடி சேமிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற கேண்டீனில் மலிவு விலை உணவு இனி வழங்கப்படாது. இதன் மூலம் அரசுக்கு ரூ17 கோடி லாபம் கிடைக்கும்.

நாடாளுமன்ற கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய அனைத்து எம்.பி.க்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மானிய விலையில் இனி கேண்டீனில் உணவுகள் கிடைக்காது.

உரிய விலைகளில்தான் நாடாளுமன்ற கேண்டீனில் உணவுகள் கிடைக்கும். இப்படி மானியம் ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ17 கோடி சேமிப்பு கிடைக்கும்.

No Subsidised food fOr MPS in Parliament canteen

நாடாளுமன்ற கேண்டீனில் ஒரு நாளைக்கு சுமார் 4,500 பேர் மானிய விலையில் உணவு சாப்பிட்டு வந்தனர். தற்போது உரிய விலைக்கே உணவு என அறிவிக்கப்பட்டுவிட்டது.

காரசாரமாக உணவு கிடைக்கும் ஆந்திரா பவன் ஹோட்டலில் ஏற்கனவே கூட்டம் அலைமோதும்... இனி ஆந்திரா பவன் ஹோட்டல் டெல்லி தர்பாரில் கிளைகளையும் திறக்க வேண்டியதும் வரலாம்.

பொதுமக்களை பெருமூச்சுவிட வைத்த நாடாளுமன்ற கேண்டீனின் மானிய விலை உணவுப் பொருட்கள் விவரம்:

சப்பாத்தி- ரூ2

சிக்கன் கறி- ரூ50

சிக்கன் கட்லெட் - ரூ41

தந்தூரி சிக்கன் - ரூ 60

காபி -ரூ5

தோசை -ரூ12

மீன் - ரூ40

ஹைதராபாத் பிரியாணி- ரூ65

சாப்பாடு ரூ7

English summary
Centre decided to No Subsidised food fOr MPS in Parliament canteen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X